Advertisement

கைதி2 இல்லையாம்... ரோலக்ஸ்சை இயக்க உள்ளாராம் இயக்குனர் லோகேஷ்

By: Nagaraj Fri, 18 Aug 2023 8:59:39 PM

கைதி2 இல்லையாம்... ரோலக்ஸ்சை இயக்க உள்ளாராம் இயக்குனர் லோகேஷ்

சென்னை: கைதி 2 படம் இப்போது இல்லையாம். அதற்கு பதில் நடிகர் சூர்யாவை வைத்து ரோலக்ஸ் படத்தை இயக்குனர் லோகேஷ் இயக்க உள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

லோகேஷ் கனகராஜ் தற்போது லியோ படத்தை இயக்கி வருகிறார். விஜய் நடிக்கும் இந்த படம் இறுதி கட்டத்தில் இருக்கிறது. அடுத்து லோகேஷ் ரஜினி நடிக்கும் தலைவர் 171 படத்தை இயக்க இருக்கிறார். அதை முடித்ததும் கைதி படத்தை அவர் இயக்க போகிறார் என முன்பே கூறப்பட்டது.

actor surya,director lokesh,produced by rolex,prisoner 2 ,நடிகர் சூர்யா, இயக்குனர் லோகேஷ், தயாரிப்பு, ரோலக்ஸ், கைதி 2

இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் லேட்டஸ்ட் தகவல் என்னவென்றால் கைதி 2 படத்தை தள்ளி வைத்துவிட்டு லோகேஷ் சூர்யா நடிக்கும் ரோலக்ஸ் படத்தை இயக்க போகிறார் என்பது தான்.

ஏற்கனவே சூர்யா ஒரு நிகழ்ச்சியில் தான் ரோலக்ஸ் மற்றும் இரும்பு கை மாயாவி ஆகிய கதைகளில் நடிப்பதாக அறிவித்தது நினைவிருக்கலாம்.

எஸ்ஆர் பிரபு தான் ரோலக்ஸ் படத்தை தயாரிக்க போகிறார், அதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது.

Tags :