Advertisement

பேய் படத்தில் நடிக்க சம்மதம் சொன்ன காஜல் அகர்வால்!

By: Monisha Wed, 02 Dec 2020 1:11:00 PM

பேய் படத்தில் நடிக்க சம்மதம் சொன்ன காஜல் அகர்வால்!

பேய் படத்தில் நடிக்க காஜல் அகர்வால் சம்மதம் சொல்லி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

தென்னிந்திய சினிமாவில் பேய் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இதனால் அதுமாதிரியான படங்கள் அதிகளவில் வெளி வருகின்றன. நடிகர், நடிகைகளுக்கும் பேய் கதைகளில் நடிக்க ஆர்வம் உள்ளது. ஏற்கனவே நயன்தாரா, அனுஷ்கா, திரிஷா, சமந்தா, ஹன்சிகா உள்ளிட்ட முன்னணி நடிகைகள் திகில் படங்களில் நடித்துள்ளனர்.

இந்த நிலையில் காஜல் அகர்வாலும் பேய் படத்தில் நடிக்க தயாராகி உள்ளார். இந்த படத்தை டீகே இயக்குவதாக கூறப்படுகிறது.

ghost movie,kajal agarwal,cinema,indian 2,kamal haasan ,பேய் படம்,காஜல் அகர்வால்,சினிமா,இந்தியன் 2,கமல்ஹாசன்

சமீபத்தில் அவர் சொன்ன கதை காஜல் அகர்வாலுக்கு பிடித்து போனதால் நடிக்க சம்மதம் சொல்லி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் மொத்தம் 4 கதாநாயகிகள் நடிப்பதாகவும், அதில் ஒருவர் காஜல் அகர்வால் என்றும் கூறப்படுகிறது.

இந்த படம் சம்பந்தமான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காஜல் அகர்வால் இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசன் ஜோடியாகவும் நடிக்கிறார். சமீபத்தில் கவுதம் என்பவரை மணந்து மாலத்தீவுக்கு தேனிலவு சென்று திரும்பி இருக்கிறார்.

Tags :
|