Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • வாடிவாசல் படம் குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த கலைப்புலி தாணு

வாடிவாசல் படம் குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த கலைப்புலி தாணு

By: Nagaraj Mon, 30 Nov 2020 09:39:46 AM

வாடிவாசல் படம் குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த கலைப்புலி தாணு

வாடிவாசல் படம் குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு.

வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ள படம் வாடிவாசல். கலைப்புலி தாணு தயாரிப்பதாக அறிவிக்கப்பட்ட இந்த படம், கைவிடப்பட்டதாக கலைப்புலி தாணு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இந்த ட்விட்டை பார்த்த சூர்யா ரசிகர்கள் குழப்பம் அடைந்தனர்.

producer thanu,termination,vadivasal,fans,twit ,தயாரிப்பாளர் தாணு, முற்றுப்புள்ளி, வாடிவாசல், ரசிகர்கள், டுவிட்

தற்போது இந்த ட்விட் குறித்து விளக்கம் அளத்துள்ள கலைப்புலி தாணு, அந்த டுவிட்டர் அக்கவுண்ட் என்னுடையது அல்ல, என் பெயரை உபயோகித்து தவறான செய்தி பரப்புகிறார்கள். வாடிவாசல் பற்றி வந்த செய்தி முற்றிலும் பொய். இதை யாரும் நம்ப வேண்டாம் என தெரிவித்துள்ளார்.

மற்றொரு டுவிட்டில், எண்ணியது எண்ணியபடி, சொல்லியது சொல்லியபடி, வெற்றி மாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் "வாடிவாசல்” வலம் வரும் வாகை சூடும் என பதிவிட்டு ரசிகர்களுக்கு தெளிவுபடுத்தி உள்ளார். இதனால் வாடிவாசல் படம் குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி விழுந்துள்ளது.

Tags :
|