Advertisement

ரஜினிக்கு BMW X7 காரை பரிசளித்த கலாநிதி மாறன்

By: vaithegi Fri, 01 Sept 2023 5:13:28 PM

ரஜினிக்கு BMW X7 காரை பரிசளித்த கலாநிதி மாறன்

‘ஜெயிலர்’ திரைப்படம் மாபெரும் வெற்றி கொண்டாடும் விதமாக ரஜினிகாந்துக்கு BMW X7 காரை படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் அன்புப் பரிசாக வழங்கி உள்ளார் ...

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 10-ம் தேதி வெளிவந்த திரைப்படம் ‘ஜெயிலர்’. தமன்னா, ரம்யாகிருஷ்ணன், சிவராஜ்குமார், மோகன்லால், சுனில், ஜாக்கி ஷெராஃப், யோகி பாபு, வசந்த் ரவி உள்ளிட்ட பலர் நடித்து உள்ள இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்து உள்ளார்.

kalanidhi maran,rajini , கலாநிதி மாறன், ரஜினி


பான் இந்தியா முறையில் வெளியாகி உள்ள இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது. தற்போது திரை அரங்குகளில் வெற்றிகரமாக திரையிடப்பட்டு வருகிறது. இதுவரை இந்தப் படம் சுமார் 600 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இச்சூழலில் படத்தின் வெற்றியைக் கொண்டாடும் விதமாக ரஜினிகாந்துக்கு BMW X7 காரை படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் பரிசளித்து உள்ளார்.இது சர்ப்ரைஸ் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. இதன் வீடியோவை சன் பிக்சர்ஸ் வெளியிட்டு உள்ளது.


Tags :