Advertisement

அனிருத்துக்கும் கார் பரிசளித்த கலாநிதி மாறன்

By: vaithegi Tue, 05 Sept 2023 2:39:15 PM

அனிருத்துக்கும் கார் பரிசளித்த கலாநிதி மாறன்

‘ஜெயிலர்’ வெற்றிக்காக படத்தின் இசையமைப்பாளர் அனிருத்துக்கு தயாரிப்பாளர் கலாநி திமாறன் Porsche காரை பரிசளிப்பு ...நடிகர் ரஜினிகாந்துக்கு 2 தோல்விப் படங்களைத் தொடர்ந்து மிக பெரும் வெற்றி தேவையாக இருந்தது. அந்த வெற்றியை ‘ஜெயிலர்’ பெற்றுக் கொடுத்து உள்ளது.

இதையடுத்து உலகம் முழுவதும் ரூ.600 கோடி வசூலை குவித்துள்ள இந்த படம் ‘விக்ரம்’, ‘பொன்னியின் செல்வன்’ ரெக்கார்டுகளை முறியடித்து உள்ளது.எனவே இந்த வெற்றிக் கொண்டாட்டத்தில் இருக்கும் படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் அண்மையில் நடிகர் ரஜினிகாந்துக்கு செக் ஒன்றை பரிசளித்தார். அடுத்து BMW X7 கார் ஒன்றையும் கொடுத்தார்.

kalanidhi maran,anirudh,jailer ,கலாநிதி மாறன்,அனிருத்,ஜெயிலர்

அடுத்து ரஜினியின் ‘கம்பேக்’க்குக்கு காரணமான நெல்சனுக்கும் செக் கொடுத்தவர், Porsche காரை அன்பளிப்பாக கொடுத்தார். இதற்கு முன்னதாக, நெட்டிசன்கள் நெல்சனுக்காக குரல் கொடுத்திருந்தனர்.

அந்த வகையில் படத்தின் வெற்றிக்கு அனிருத் முக்கிய காரணம் எனஎன்று பலரும் தெரிவித்து வந்த சூழலில் அனிருத்தை சந்தித்து படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் செக் ஒன்றை கொடுத்திருந்தார். இதையடுத்து அவருக்கு கார் ஒன்று பரிசு வழங்கப்படலாம் என ரசிகர்கள் கணித்த நிலையில், கலாநிதிமாறன் Porsche காரை அனிருத்துக்கு கிஃப்ட் செய்து உள்ளார் .

Tags :