Advertisement

இயக்குனர் நெல்சனுக்கும் கார் கிப்ட் அளித்த கலாநிதி மாறன்

By: Nagaraj Sun, 03 Sept 2023 6:54:59 PM

இயக்குனர் நெல்சனுக்கும் கார் கிப்ட் அளித்த கலாநிதி மாறன்

சென்னை: இயக்குனர் நெல்சனுக்கும் சன் பிக்சர்ஸ் கிப்ட் கொடுத்து இருக்கிறது. அவருக்கு கலாநிதி மாறன் செக் கொடுத்த நிலையில், கார் ஒன்றையும் கிப்ட் செய்திருக்கிறார்.

ஜெயிலர் படம் பிரம்மாண்ட வசூல் சாதனை படைத்து இருக்கும் நிலையில் அதன் விவரங்களை சன் பிக்சர்ஸ் அதிகாரபூர்வமாக அறிவித்து இருக்கிறது. லாபத்தில் ஒரு பங்கை சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு நேற்று சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் செக் ஆக கொடுத்து இருந்தார்.

director nelson,jailer,vasool,athadha,car gift,sun pictures ,இயக்குனர் நெல்சன், ஜெயிலர், வசூல், சாதனை, கார் கிப்ட், சன் பிக்சர்ஸ்

அது மட்டுமின்றி பல சொகுசு கார்களை நிறுத்தி அதில் இருந்து ஒன்றை ரஜினியை தேர்வு செய்ய வைத்து அதை கிப்ட் ஆக கொடுத்தார். ரஜினி BMW X7 காரை தேர்வு செய்து இருந்தார்.

மேலும் இயக்குனர் நெல்சனுக்கும் சன் பிக்சர்ஸ் கிப்ட் கொடுத்து இருக்கிறது. அவருக்கு கலாநிதி மாறன் கையால் செக் கொடுத்த நிலையில், கார் ஒன்றையும் கிப்ட் செய்திருக்கிறார். நெல்சன் தேர்வு செய்த Porsche காரை தான் அவருக்கு கிப்ட் ஆக கொடுத்திருக்கிறார் அவர்.

Tags :
|
|