Advertisement

விஜய்க்கு அட்வைஸ் கொடுத்த கமல்

By: vaithegi Wed, 08 Nov 2023 3:56:38 PM

விஜய்க்கு அட்வைஸ் கொடுத்த கமல்

நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் நடிகர் விஜய்க்கு அட்வைஸ் ஒன்றை கொடுத்த பழைய வீடியோ வைரலாகி கொண்டு வருகிறது. அதில் தொகுப்பாளர் ஒருவர் சமீபகாலமாக விஜய் அரசியல் பற்றி பேசி வருகிறார். இசை வெளியீட்டு விழாவில் கூட தான் முதலமைச்சரானால் இப்படி செய்வேன் என கூட விளையாட்டாக பேசி இருக்கிறார்.

விஜய் இப்படி பேசியதை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என விஜய் அரசியல் வருகை குறித்த கேள்வி கேட்கப்பட்டது.இதையடுத்து அதற்கு பதில் அளித்த கமல்ஹாசன் ” விஜய் விளையாட்டாக பேசி இருக்கார் என்று நீங்கள் சொன்னீர்கள் ஆனால், அது விளையாட்டாக இருக்க கூடாது என தான் நான் நினைக்கிறன். அவர் அதனை விளையாட்டாக சொல்லி இருக்க கூடாது.

kamal,vijay,advice ,கமல்,விஜய்,அட்வைஸ்


அரசியலுக்கு வரும் ஆசை யாருக்கு வேண்டுமானாலும் இருக்கலாம் ஆனால், என்னை பொறுத்தவரை அதற்கான தகுதிகளை வளர்த்து கொண்டு வந்தால் இன்னும் சந்தோசம் தான்” என்று கூறியுள்ளார்.

நேற்று கமல்ஹாசனின் பிறந்த நாளை முன்னிட்டு விஜய் – கமல் இருவரும் சமீபத்தில் சந்தித்துக்கொண்டு எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வைரலான நிலையில், தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Tags :
|
|