Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • அமிதாப் – பிரபாஸ் படத்தில் நடிக்க 20 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ள கமல்?

அமிதாப் – பிரபாஸ் படத்தில் நடிக்க 20 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ள கமல்?

By: Nagaraj Mon, 19 June 2023 09:44:13 AM

அமிதாப் – பிரபாஸ் படத்தில் நடிக்க 20 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ள கமல்?

சென்னை: கமல் இணைய போவதாக தகவல்... நடிகர் பிரபாஸ், அமிதாப் பச்சன், தீபிகா படுகோனே நடிக்கும் புதிய படமான 'ப்ராஜக்ட் கே' படத்தில் கமல், ஆகஸ்ட் மாதத்தில் இணையப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

2018ல் தெலுங்கில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான 'மகாநதி' படத்தை இயக்கிய நாக் அஸ்வின் இயக்கத்தில் 'ப்ராஜக்ட் கே' படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் பிரபாஸுடன் தீபிகா படுகோனே, அமிதாப் பச்சன், திஷா பதானி உட்பட பலரும் நடிக்கின்றனர்.

ஹாலிவுட் தரத்திற்கு இணையாக எடுக்கப்பட்டு வரும் இப்படத்தை, 500 கோடி பட்ஜெட்டில் வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. தெலுங்கு, தமிழ், இந்தி மொழிகளில் உருவாகி வரும் இப்படத்திற்கு, சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

in august,kamal,shooting,20 days,call sheet ,ஆகஸ்ட் மாதம், கமல், படப்பிடிப்பு, 20 நாட்கள், கால்ஷீட்

இந்நிலையில், இப்படத்தில் நடிகர் கமல்ஹாசனை வில்லனாக நடிக்க வைப்பதற்கான பேச்சுவார்த்தை நடந்துவந்ததாகவும், அதற்கு 150 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாகவும் ஏற்கெனவே தகவல்கள் கூறப்பட்டு வந்தது.

இதையடுத்து, இப்படத்தின் படப்பிடிப்பில் நடிகர் கமல்ஹாசன் ஆகஸ்ட் மாதம் கலந்து கொள்ளவிருக்கிறார் என்று கூறப்படுகிறது. அவர் இதற்காக 20 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளதாகவும், ஆகஸ்ட் மாதத்தில் படப்பிடிப்பில் கலந்துகொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Tags :
|