- வீடு›
- பொழுதுபோக்கு›
- இந்தியன்-2 படத்தின் டப்பிங் பணியில் கமல் மும்முரம்... வீடியோ வெளியிட்ட படக்குழுவினர்
இந்தியன்-2 படத்தின் டப்பிங் பணியில் கமல் மும்முரம்... வீடியோ வெளியிட்ட படக்குழுவினர்
By: Nagaraj Wed, 11 Oct 2023 11:50:35 AM
சென்னை: பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளில் இந்தியன் 2 திரைப்படம் வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் இந்த படத்திற்காக கமல் டப்பிங் பேசும் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துவந்த இந்தியன் 2 படம் விபத்து உள்ளிட்ட காரணங்களால் பாதியில் நின்றது. கமலின் ‘விக்ரம்’ மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதைத் தொடர்ந்து ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு மீண்டும் வேகமெடுத்துள்ளது.
லைகா தயாரிப்பில் அனிருத் இசையில் ரவி வர்மா, ரத்னவேலு ஒளிப்பதிவில் உருவாகும் இந்தியன் 2 படத்தில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடித்து வருகின்றனர்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடைய உள்ளதாகவும், அடுத்தாண்டு பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளில் இந்தியன் 2 திரைப்படம் வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தியன் 2 படத்துக்கு கமல் டப்பிங் செய்யும் விடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
சமீபத்தில் ஷங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் விஎஃப்எக்ஸ் புகைப்படத்தினை பகிர்ந்துள்ளார். அதில் அமெரிக்காவிலுள்ள புகழ்பெற்ற லோலா விஎஃபெக்ஸ் நிறுவனத்தில் அதி நவீன விஎஃப்எக்ஸ் குறித்து சோதனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவித்தன. இந்நிலையில் டப்பிங் பணிகள் நடைபெற்று வருவதாக படக்குழு வீடியோவினை வெளியிட்டுள்ளது.