Advertisement

கமல் – மணிரத்னம் இணையும் படத்தின் கிளிம்பஸ் வீடியோ வெளியீடு

By: Nagaraj Sat, 28 Oct 2023 5:27:52 PM

கமல் – மணிரத்னம் இணையும் படத்தின் கிளிம்பஸ் வீடியோ வெளியீடு

சென்னை: அடுத்த நாயகன் என ரசிகர்கள் உற்சாகம்... கமல்ஹாசன் - மணிரத்னம் காம்போவில் உருவாகும் படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது. ரசிகர்கள் இதை அடுத்த நாயகன் என்று கமெண்ட் அடித்து வருகின்றனர்.

நடிகர் கமல்ஹாசன் ஷங்கர் இயக்கத்தில் நடித்த ‘இந்தியன் 2’ படத்தை முடித்துவிட்டார். அடுத்து பிரபாஸின் ‘கல்கி 2829 ஏ.டி’ படத்திலும் இயக்குநர்கள் மணிரத்னம், ஹெச்.வினோத் ஆகியோர் இயக்கும் படங்களில் நடிக்க இருக்கிறார்.

இந்நிலையில் சமீபத்தில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிவரும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில், மணிரத்னம் இயக்கவுள்ள KH234 படத்தின் ப்ரொமோ நவம்பர் 7ம் தேதி வெளியாகும் என தெரிவித்திருந்தார். அதேபோல், KH234 படம் குறித்த தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என தெரிவித்திருந்தார்.

mani ratnam,hero,klimpus video,actor kamal,37 years ,மணிரத்னம், நாயகன், கிளிம்பஸ் வீடியோ, நடிகர் கமல், 37 ஆண்டுகள்

இந்நிலையில் இயக்குநர் மணிரத்னத்தின் தயாரிப்பு நிறுவனமான மெட்ராஸ் டாக்கீஸ் சார்பில் KH234 படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில் நாயகன் படத்தில் கமல் பேசும் ”நான் அடிச்ச நீ செத்துருவ” எனும் டயலாக்கில் இருந்து தொடங்குகிறது.

1987ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த நாயகன் படம் வெளியானது. அந்த ஆண்டை குறிப்பிட்டு அதன்பிறகு 37 ஆண்டுகள் கழித்து இருவரும் இணைகிறார்கள். இதை ரசிகர்கள் அடுத்த நாயகன் என்று உற்சாகத்துடன் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Tags :
|