Advertisement

மிக விலை உயர்ந்த ரோலக்ஸ் வாட்சை சூர்யாவுக்கு பரிசளித்த கமல்

By: Nagaraj Wed, 08 June 2022 8:47:29 PM

மிக விலை உயர்ந்த ரோலக்ஸ் வாட்சை சூர்யாவுக்கு பரிசளித்த கமல்

சென்னை: நடிகர் சூர்யாவின் வீ்ட்டுக்கு நேரில் சென்ற கமல்ஹாசன் சூர்யாவுக்கு உலகிலேயே மிகவும் விலையுயர்ந்த ரோலக்ஸ் வாட்ச் ஒன்றை பரிசளித்தார்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் டைரக்‌ஷனில் கமல்ஹாசன், சூர்யா, விஜய் சேதுபதி மற்றும் ஃபகத் ஃபாசில் நடித்த ‘விக்ரம்’ திரைப்படம் கடந்த ஜூன்-3-ம் தேதி வெளியானது. இத்திரைப்படம், கடந்த 4 நாட்களில் உலகளவில் 200 கோடி வசூலைத் தாண்டிவிட்டது.

கமல்ஹாசனின் படங்களிலேயே மிக அதிக வசூலைப் பெற்ற திரைப்படம் என்ற பெருமையை இந்தப் படம் பெற்றுவிட்டது. இதனால் பெரும் மகிழ்ச்சியடைந்த நடிகர் கமல்ஹாசன் படத்தை இயக்கிய இயக்குநரான லோகேஷ் கனகராஜூக்கு லெக்சஸ் கார் ஒன்றை பரிசாக அளித்தார்.

kamal,actor surya,went home,rolex watts,gift ,கமல், நடிகர் சூர்யா, வீட்டுக்கு சென்றார், ரோலக்ஸ் வாட்ஸ், பரிசு

மேலும் லோகேஷிடம் உதவி இயக்குநர்களாக இந்த விக்ரம் படத்தில் பணியாற்றிய 13 உதவி இயக்குநர்களுக்கும் 1 லட்சம் ரூபாய் மதிப்புள்ள டிவிஎஸ் அப்பாச்சி இரு சக்கர வாகனத்தைப் பரிசளித்தார்.
மேலும் இத்திரைப்படத்தின் கடைசி காட்சியில் ரோலக்ஸ் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருந்த நடிகர் சூர்யாவுக்கும் நேற்று தனது டிவீட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்து பதிவிட்டார் கமல்ஹாசன்.
இந்த நிலையில் இன்று காலையில் நடிகர் சூர்யாவின் வீ்ட்டுக்கு நேரில் சென்ற கமல்ஹாசன் சூர்யாவுக்கு உலகிலேயே மிகவும் விலையுயர்ந்த ரோலக்ஸ் வாட்ச் ஒன்றை பரிசளித்தார். இந்த வாட்ச்சின் மதிப்பு. 14 லட்சத்து 72 ஆயிரத்து 500 ரூபாயாகும்.

Tags :
|