Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • ரஜினி மறுக்க கமல் நடிக்கிறார்; செம பம்பர் பரிசு பெற்ற மகிழ்ச்சியில் லோகேஷ் கனகராஜ்

ரஜினி மறுக்க கமல் நடிக்கிறார்; செம பம்பர் பரிசு பெற்ற மகிழ்ச்சியில் லோகேஷ் கனகராஜ்

By: Nagaraj Thu, 07 May 2020 6:34:45 PM

ரஜினி மறுக்க கமல் நடிக்கிறார்; செம பம்பர் பரிசு பெற்ற மகிழ்ச்சியில் லோகேஷ் கனகராஜ்

ரஜினி மறுக்க இப்போது கமல்ஹாசன் தானோ நடிக்கிறேன் என்று கூறியதாக தகவல்கள் உலா வருகின்றன. என்ன விஷயம் தெரியுங்களா.

கைதி படத்தின் சூப்பர் டூப்பர் ஹிட்டுக்கு பின்னர் மாஸ்டர் திரைப்படத்தை இயக்கி உள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இதையடுத்து இவர் கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினியை வைத்து படம் எடுக்கப்போவதாக தகவல்கள் வெளிவந்திருந்தன.

ஆனால், தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினி இப்படத்தின் கதையை கேட்டுவிட்டு, கதையில் கமர்ஷியல் காட்சிகள் குறைவாக இருக்கிறது என கூறி நடிக்க மறுத்துவிட்டாராம்.

actor rajinikanth,rajini,tamil cinema,bollywood,entertainment ,நடிகர் ரஜினிகாந்த், ரஜினி, தமிழ் சினிமா, பாலிவுட், பொழுதுபோக்கு

இதனால் இப்படத்தில் நானே நடிக்கிறேன் என்று கமல் ஹாசன் கூறியிருப்பதாகவும் தெரியவந்துள்ளது. இதனால் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது குருவாக நினைக்கும் கமல் ஹாசனை இயக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார் என்று கோலிவுட் வாசிகள் தெரிவிக்கின்றனர்.

Tags :
|