Advertisement

நடிகர் சூர்யாவை அடுத்த நாயகன் என்று தெரிவித்த கமல்

By: Nagaraj Sun, 07 Aug 2022 8:01:00 PM

நடிகர் சூர்யாவை அடுத்த நாயகன் என்று தெரிவித்த கமல்

சென்னை: இவர்தான் அடுத்த நாயகன் என விக்ரம் படத்தில் ரோலக்ஸ் கேரக்டரில் நடித்த சூர்யாவுக்கு தனது பட்டத்தை வழங்கியுள்ளார் உலகநாயகன் கமலஹாசன்.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் திரைப்படம் 500 கோடி வரை வசூல் சாதனை படைத்த நிலையில் திரையரங்குகளில் 50 நாட்களைத் தாண்டி ஓடிக் கொண்டிருக்கிறது.

இதனிடையே விக்ரம் திரைப்படத்தின் 50 நாட்கள் வெற்றி விழாவை கொண்டாடும் விதமாக விக்ரம் 50 நிகழ்ச்சியில்,கமலஹாசன் கலந்துகொண்டு அவர் நடித்த பல திரைப்படங்களின் அனுபவங்களை பேசி மகிழ்ந்தார். இதனிடையே விக்ரம் திரைப்படம் குறித்த அனுபவங்களை பகிர்ந்துகொண்ட கமல் வெறும் பத்து நிமிட காட்சிகளில் மட்டுமே இடம் பெற்ற சூர்யாவை பற்றி பேசியுள்ளார்.

vetri,sakalakala vallavan,fans,vikram vetri,surya,kamal ,வெற்றி, சகலகலா வல்லவன், ரசிகர்கள், விக்ரம் வெற்றி, சூர்யா, கமல்

அதில் சூர்யாவின் கதாபாத்திரமான ரோலக்ஸ் கதாபாத்திரம் ஹீரோ கிடையாது, ஆனால் அந்த கதாபாத்திரம் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய கதாபாத்திரம் என கமலஹாசன் தெரிவித்தார் மேலும் அடுத்த நாயகன் சூர்யா என அந்த மேடையில் அனைவரது முன்னிலையிலும் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

மேலும் விக்ரமுடைய வெற்றிக்கு ஒரே காரணம் ரசிகர்கள் தான் என்றும் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தால் தான் படத்தை ரசிகர்கள் ரசிப்பார்கள் என்றும் தெரிவித்தார். மேலும் இன்றைய விக்ரம் எப்படி வெற்றி அடைந்ததோ அதே போல் தான் சகலகலா வல்லவன் அன்று வெற்றியடைந்தது என்று கமலஹாசன் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

Tags :
|
|
|