Advertisement

செமத்தியாக கண்டிப்பு காட்டிய கமல்... வைரலாகும் வீடியோ

By: Nagaraj Sun, 06 Nov 2022 8:42:23 PM

செமத்தியாக கண்டிப்பு காட்டிய கமல்... வைரலாகும் வீடியோ

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களிடம் செம கண்டிப்பு காட்டியுள்ளார் நடிகர் கமல்.


விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் ஆறாவது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இதில் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் முதல் வாரம் ஜி பி முத்து மற்றும் நடன இயக்குனர் சாந்தி வீட்டை விட்டு வெளியேறப்பட்டார்.

கடந்த வாரம் அசல் கோளாறு குறைந்த வாக்குகள் பெற்ற நிலையில் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு செரினா எலிமினேட் செய்யப்பட்டுள்ளார். அவர் வீட்டில் தமிழில் பேசாமல் எப்போதும் ஆயிஷா உள்ளிட்ட போட்டியாளர்களிடம் மலையாளம் மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே பேசியுள்ளார்.

warned,kamal,bigg boss 6,contestants,viral ,எச்சரித்துள்ளார், கமல், பிக்பாஸ் 6, போட்டியாளர்கள், வைரல்

இதுகுறித்து கமல்ஹாசன் பலமுறை எச்சரித்தும் அதனை அவர் அப்படியே தொடர்ந்ததால் இன்று வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். அப்போது கமல்ஹாசன் கார்டை காட்டி தான் அதனை அறிவித்தார். ஆனால் அந்தக் கார்டு மலையாளத்தில் இருப்பது பலருக்கும் ஆச்சரியம் கொடுத்தது. தொடர்ந்து செரீனா மலையாளத்தில் பேசியதால்தான் எலினேட் ஆகிறார் என காட்டத்தான் கமல்ஹாசன் இப்படி செய்துள்ளார்.

அது மட்டுமல்லாமல் கமல்ஹாசன் முன்பு இல்லாத வகையில் தற்போது போட்டியாளர்களை கடுமையாக எச்சரித்துள்ளார். அது வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது

Tags :
|
|