Advertisement

கமலின் விக்ரம் படத்தில் வில்லனாக பகத்பாசில் நடிக்க உள்ளதாக தகவல்

By: Nagaraj Tue, 08 Dec 2020 10:01:13 PM

கமலின் விக்ரம் படத்தில் வில்லனாக பகத்பாசில் நடிக்க உள்ளதாக தகவல்

கமலின் விக்ரம் படத்தில் வில்லனாக பகத் பாசில் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

தமிழில் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 2017-ம் ஆண்டு வெளியான படம் வேலைக்காரன். ரசிகர்கள் மத்திய கலவையான விமர்சனங்களை பெற்ற இந்த படத்தில் பிரபல மலையாள நடிகர் பகத் பாசில் வில்லனாக நடித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்த அவர் தற்போது கமல் நடிப்பில் உருவாக இருக்கும் விக்ரம் படத்தில் வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

kamal,vikram,bhagatpasil,villain,lokesh kanagaraj ,கமல், விக்ரம், பகத்பாசில், வில்லன், லோகேஷ் கனகராஜ்

மாநகரம் படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமான இயக்குநர் லோகேஷ் கனகராஜ், தனது 2-வது படமாக கார்த்தியை வைத்து கைதி படத்தை இயக்கினார்.

அதனைத் தொடர்ந்து தற்போது விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிக்க மாஸ்டர் படத்தை இயக்கியுள்ள அவர், தற்போது தனது 4-வது படமாக உலகநாயகன் கமல்ஹாசனுடன் இணைந்துள்ள படம் விக்ரம். கமலின் 232 வது படமாக உருவாகும் இந்த படத்தில்தான் பகத் பாசில் வில்லனாக நடிக்கவுள்ளார்.

Tags :
|
|