Advertisement

தீவிர ரசிகரின் நடனத்தைப்பார்த்து நெகிழ்ந்து போன கமலஹாசன்!

By: Monisha Sat, 20 June 2020 1:56:22 PM

தீவிர ரசிகரின் நடனத்தைப்பார்த்து நெகிழ்ந்து போன கமலஹாசன்!

பிரபல நடிகர் நடிகைகள் நடிக்கும் படங்களில் இடம்பெற்றுள்ள பாடல்கள் மற்றும் வசனங்களை அவர்களது ரசிகர்கள் பேசுவதும் பாடுவதுமான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வலம் வரும். அந்த வகையில் கடந்த 1989ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடித்த ’அபூர்வ சகோதரர்கள்’ என்ற படத்தில் இடம்பெற்ற ’அண்ணாத்த ஆடுறார்’ என்ற பாடலை கமல் போன்றே வேடமிட்டு ரசிகர் ஒருவர் நடனமாடி அது குறித்த வீடியோவை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

மேலும் அவர் உடற்பயிற்சி செய்து கொண்டே இந்த நடனத்தை ஆடி உள்ளது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. 31 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த தனது ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தில் இடம்பெற்ற பாடலுக்கு தனது தீவிர ரசிகர் ஒருவர் நடனமாடிய வீடியோவை பார்த்த கமல்ஹாசன் அவர்கள் அவருக்கு பாராட்டு தெரிவித்ததோடு, ‘மகனே’ என அழைத்து ஒரு அப்பனாக பெருமைப்படுவதாக கூறியுள்ளார்.

fan,dancing,kamalhassan,viral,cinema ,ரசிகர்,நடனம்,கமல்ஹாசன்,வைரல்,சினிமா

இது குறித்து கமல்ஹாசன் தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது:- நான் செய்த நல்வினைகள் என் ரசிகரை சென்று அடைந்ததா எனும் சந்தேகம் எல்லாக் கலைஞர்களுக்கும் உண்டு. என் சிறு அசைவுகளைக் கூட கவனித்த அண்ணாத்த ஆடுறார். அது அப்பனுக்கு எவ்வளவு பெருமை? வாழ்க மகனே ! என்னைத் தலைமுறைகள் விஞ்சப் பார்த்து மகிழ்வதே என் கடமை, பெருமை!

கமல்ஹாசனின் இந்த டுவிட்டும், ரசிகரின் வீடியோவும் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Tags :
|
|