Advertisement

ருத்ர தாண்டவ வசூல் வேட்டை நடத்தும் கமலின் விக்ரம் படம்

By: Nagaraj Mon, 06 June 2022 2:54:34 PM

ருத்ர தாண்டவ வசூல் வேட்டை நடத்தும் கமலின் விக்ரம் படம்

சென்னை: நடிகர் கமல் நடித்துள்ள விக்ரம் படம்தான் இப்போது செம டாக் ஆப் சிட்டியாக உள்ளது. வசூல் வேட்டை நடத்தி வரும் இந்த படம் குறித்த விமர்சனங்கள் சிறப்பாக வந்து கொண்டு இருப்பதால் படக்குழுவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்;.

விக்ரம் என்ற ஒற்றை வார்த்தையைதான் ஒட்டு மொத்த இந்திய சினிமாவும் இதை பற்றி தான் பேசி வருகிறது. அந்த அளவிற்கு விக்ரம் பட்டித்தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பி வருகிறது. இந்நிலையில் விக்ரம் தமிழகத்தில் மட்டும் ரூ 65 கோடி வரை வசூல் செய்ய, சென்னையில் வசூல் ருத்ர தாண்டவம் ஆடியுள்ளது.

came,won,kamal film,vikram,collection hunt,tamil nadu ,வந்தார், வென்றார், கமல் படம், விக்ரம், வசூல் வேட்டை, தமிழகம்

சென்னையில் விக்ரம் படம் ரூ 5.2+ கோடி வரை வசூல் செய்துள்ளது. கண்டிப்பாக சென்னையில் மட்டும் இப்படம் ரூ 15 கோடி வரை வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வந்தாலும் சிறப்பாக வந்தாரு... செம படம் தந்தாரு என்று ரசிகர்கள் உற்சாகத்துடன் உள்ளனர். தியேட்டர் உரிமையாளர்களும் கலெக்சனால் கல்லா நிரம்புவதால் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

Tags :
|
|
|