Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • பரபரப்புக்கு மத்தியில் தலைவி படத்தின் படப்பிடிப்பில் கங்கனா ரணாவத்!

பரபரப்புக்கு மத்தியில் தலைவி படத்தின் படப்பிடிப்பில் கங்கனா ரணாவத்!

By: Monisha Wed, 30 Sept 2020 11:29:09 AM

பரபரப்புக்கு மத்தியில் தலைவி படத்தின் படப்பிடிப்பில்  கங்கனா ரணாவத்!

கடந்த சில நாட்களாக அகில இந்திய ஊடகங்களில் தலைப்பு செய்திகளில் இடம் பெற்று வருபவர் கங்கனா ரணாவத். சுஷாந்த்சிங் தற்கொலை குறித்து பரபரப்பான கருத்துக்களை கூறிய அவர் மகாராஷ்டிரா அரசுக்கு எதிராக ஒரு சில கருத்துக்களை தெரிவித்ததால் அம்மாநில அரசு அவருடைய அலுவலகம் மற்றும் வீட்டை இடிக்கும் முயற்சியில் ஈடுபட்டது. கங்கனாவுக்கு பின்புலமாக பாஜக இருப்பதாகவும், விரைவில் அவர் பாஜகவில் இணைவார் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் அரசியல் பரபரப்புக்கு இடையே தற்போது இயக்குனர் விஜய் இயக்கி வரும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான 'தலைவி' படத்தின் படப்பிடிப்பில் அவர் கலந்துகொள்ளவுள்ளார். இந்த படத்தில் இடம்பெறும் ஒரு பாடலுக்காக அவர் தற்போது ரிகர்சல் செய்து வருவதாகவும் இந்த பாடலுக்கு பிருந்தா மாஸ்டர் நடன பயிற்சி செய்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

kangana ranaut,leader film,shooting,dance training,jayalalithaa ,கங்கனா ரணாவத்,தலைவி படம்,படப்பிடிப்பு,நடன பயிற்சி,ஜெயலலிதா

இதுகுறித்து பிருந்தா மாஸ்டரின் உதவி இயக்குனர் ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்துடன் கூடிய பதிவை செய்துள்ளார் என்பதும் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தலைவி படத்தில் ஜெயலலிதா கேரக்டரில் கங்கனா ரனாவத், எம்ஜிஆர் கேரக்டரில் அரவிந்த்சாமி, சோபன்பாபு கேரக்டரில் ஜிஷூ சென்குப்தா, சசிகலா கேரக்டரில் பிரியாமணி, எம்ஜிஆரின் மனைவி ஜானகி ராமச்சந்திரன் கேரக்டரில் நடிகை மதுபாலா ஆகியோர் நடித்து வருகின்றனர்.. இந்த படத்திற்கு ஜீவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படம் தமிழ் தெலுங்கு ஹிந்தி ஆகிய மொழிகளில் தயாராகி வருகிறது.

Tags :