Advertisement

மூன்று பாகங்களாக கங்குவா படம் உருவாகிறதாம்... ரசிகர்கள் உற்சாகம்

By: Nagaraj Wed, 26 July 2023 11:39:06 PM

மூன்று பாகங்களாக கங்குவா படம் உருவாகிறதாம்... ரசிகர்கள் உற்சாகம்

சென்னை: மூன்று பாகங்களாக கங்குவா படம் உருவாகிறது என்ற தகவல்கள் கோலிவுட்டில் காட்டுத் தீ போல் பரவி வருகிறது.

சினிமா: சூர்யா தற்போது சிவா இயக்கத்தில் ‘கங்குவா’ படத்தில் நடித்து வருகிறார். ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இந்தப் படம் 3டியில் சரித்திரப் படமாக 10 மொழிகளில் வெளியாகவுள்ளது.

formed,kangua,parts,three ,உருவாகும், கங்குவா, பாகங்கள், மூன்று

சமீபத்தில் ‘கங்குவா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தது.

இதையடுத்து சூர்யாவின் பிறந்தநாளில் படத்தின் கிளிம்பஸ் வீடியோ வெளியிடப்பட்டது. இந்நிலையில் ‘கங்குவா’ படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, இப்படத்தின் மூன்று பாகங்களுக்கான திரைக்கதை தயாராகிவிட்டதாகவும், முதல் பாகம் வெளியான பிறகு, அதன் வரவேற்பைத் தொடர்ந்து அடுத்தடுத்த பாகங்கள் உருவாகும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Tags :
|
|
|