Advertisement

கர்ஜிக்கும் சந்திரமுகி-2 படத்தின் டிரைலர்... ரசிகர்கள் வரவேற்பு

By: Nagaraj Mon, 04 Sept 2023 09:27:33 AM

கர்ஜிக்கும் சந்திரமுகி-2 படத்தின் டிரைலர்... ரசிகர்கள் வரவேற்பு

சென்னை: அது சாதாரண பகையில்லை. 200 வருஷ பகை என்று கர்ஜிக்கும் சந்திரமுகி- 2 படத்தின் டிரைலர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி இருக்கும் திரைப்படம் 'சந்திரமுகி -2'. இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்துள்ளார்.

கங்கனா ரனாவத் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் வடிவேலு, ராதிகா உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் இதில் நடித்திருக்கின்றனர். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு எம்.எம் கீரவாணி இசையமைத்துள்ளார்.

no ordinary enemy,chandramukhi-2,trailer,fans,crew ,சாதாரண பகையில்லை, சந்திரமுகி-2, டிரைலர், ரசிகர்கள், படக்குழு

'சந்திரமுகி 2' திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகவுள்ளது. இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இந்த நிலையில், சந்திரமுகி 2 படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. டிரைலர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அது சாதாரண பகையில்லை. 200 வருஷ பகை என்று கர்ஜிக்கும் சந்திரமுகி- 2 படத்தின் டிரைலர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

Tags :
|