Advertisement

சர்தார் பட ப்ரோமோஷன்... தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கார்த்தி

By: Nagaraj Mon, 24 Oct 2022 4:14:09 PM

சர்தார் பட ப்ரோமோஷன்... தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில்  கார்த்தி

சென்னை: நடிகர் கார்த்தி நடித்துள்ள சர்தார் திரைப்படம் கடந்த 21ம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. வசூலில் வேட்டையாடி வருகிறது. இதனால் நடிகர் கார்த்தி செம உற்சாகத்தில் உள்ளார். ஹாட்ரிக் வெற்றி கொடுத்த மகிழ்ச்சியில் திளைத்து வரும் கார்த்தி சர்தார் பட ப்ரோமோஷனுக்காக தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.

பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தை தமிழில் உதயநிதி ஸ்டாலின் தனது ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பாக வெளியிட, தெலுங்கில் நடிகர் நாகார்ஜுனா அன்னபூர்ணா ஸ்டுடியோஸ் சார்பாக வெளியிட்டுள்ளார்.

sardaar,telugu bigg boss,actor karthi,participation,lead role ,சர்தார், தெலுங்கு பிக்பாஸ், நடிகர் கார்த்தி, பங்கேற்பு, முக்கிய வேடம்

தெலுங்கில் இந்தப் படத்தை பிரபலப்படுத்தும் விதமாக நடிகர் நாகார்ஜுனா தொகுத்து வழங்கும் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கார்த்தி கலந்து கொண்டுள்ளார். நேற்று ஒளிபரப்பான அந்த நிகழ்ச்சி ப்ரமோ வெளியானது முதல் ரசிகர்கள் மத்தியில் செம வைரலானது.

சர்தார் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ரஜிஷா விஜயன், ராஷி கண்ணா நடிக்க, யூடியூப் பிரபலம் ரித்விக் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். பி.எஸ்.மித்ரன் எழுதி இயக்கியுள்ளார்.

Tags :