Advertisement

கார்த்தியின் ‘ஜப்பான்’ பட டிரைலர் வெளியீடு

By: vaithegi Sun, 29 Oct 2023 08:12:46 AM

கார்த்தியின் ‘ஜப்பான்’ பட டிரைலர் வெளியீடு


எழுத்தாளரான ராஜு முருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்துள்ள ‘ஜப்பான்’ திரைப்படத்தில் அனு இமானுவேல், இயக்குனர் விஜய் மில்டன் மற்றும் தெலுங்கு நடிகர் சுனில் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து உள்ளனர்.

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிபில், ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள ஜப்பான் திரைப்படம் இந்தாண்டு தீபாவளி பண்டிகை முன்னிட்டு வெளியிட இருப்பதாக படக்குழு அறிவித்து உள்ளது. ஆனால், தீபாவளி ஞாயிற்றுக்கிழமை வருவதால், வருகிற வியாழன் (நவம்பர் 9) வெளியிட திட்டமிட்ட நிலையில், தயாரிப்பாளர்கள் இப்போது அதிகாரப்பூர்வமாக படத்தை வரும் நவம்பர் 10 ஆம் தேதி வெள்ளிக்கிழமை வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது.

japan,karthi,trailer ,ஜப்பான்,கார்த்தி,டிரைலர்

இந்நிலையில், நடிகர் கார்த்திக்கு ஜப்பான் 25 திரைப்படம் என்பதால்,நேற்று சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில், பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழாவை நடத்தினர். மேலும், இரவு 10 மணிக்கு டிரைலர் வெளியிடுவதாக முன்னதாக அறிவித்திருந்தனர். எனவே அதன்படி, ஜப்பான் படத்தின் டிரைலரை தற்போது வெளியிட்டுள்ளனர்.

வித்தியாசமான கதைக்களத்தை கொண்டு உருவாகியுள்ள இப்படத்தின் ட்ரைலரை வைத்து பார்க்கையில் படம் பெரிய அளவில் வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. டீசரை போலவே டிரைலரில் வரும் காட்சிகள் அனைத்தும் பார்ப்பதற்கே மிகவும் பயங்கரமாக இருக்கிறது.

Tags :
|
|