Advertisement

கட்டா குஸ்தி திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல்

By: Nagaraj Thu, 29 Dec 2022 4:35:53 PM

கட்டா குஸ்தி திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல்

சென்னை: கட்டா குஸ்தி திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. வரும் புத்தாண்டு தினத்தில் நெட்பிளிக்ஸ் தளத்தில் இப்படம் ரிலீஸ் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் செல்லா அய்யாவு இயக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷால் நடித்துள்ள திரைப்படம் ‘கட்டா குஸ்தி’. இதில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி கதாநாயகியாக நடித்துள்ளார்.

இந்த திரைப்படம் தமிழ்-தெலுங்கு என இருமொழிகளில் உருவாகி உள்ளது. ‘கட்டா குஸ்தி’ படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கிறார்.

accordingly,information,kata kusti movie,netflix ott, ,ஓடிடி தளத்தில், கட்டா குஸ்தி, ஜனவரி 1-ஆம் தேதி, திரைப்படம்

இப்படம் கடந்த 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி 25 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், கட்டா குஸ்தி திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இப்படம் வருகிற ஜனவரி 1-ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இது தொடர்பான புகைப்படமும் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Tags :