Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • காவாலா பாடல் யூடியூபில் 70 மில்லியன் பார்வையாளர்களை கடந்து விட்டதாம்

காவாலா பாடல் யூடியூபில் 70 மில்லியன் பார்வையாளர்களை கடந்து விட்டதாம்

By: Nagaraj Wed, 26 July 2023 11:37:33 PM

காவாலா பாடல் யூடியூபில் 70 மில்லியன் பார்வையாளர்களை கடந்து விட்டதாம்

சென்னை: யூடியூபில் 70 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது காவாலா பாடல் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய திரையுலகின் முன்னணி நடிகரான ரஜினி தற்போது ‘ஜெயிலர்’ படத்தில் நடித்து வருகிறார். படத்தை நெல்சன் இயக்குகிறார். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, வசந்த் ரவி, விநாயகன் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

70 million,kavala,song,viewers,youtube ,70 மில்லியன், காவாலா, பாடல், பார்வையாளர்கள், யூடியூப்

இப்படத்தில் முத்துவேல் பாண்டியன் என்ற ஜெயிலராக ரஜினிகாந்த் நடித்திருந்தார். ஆக்‌ஷன் கலந்த இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். ‘ஜெயிலர்’ படத்தின் ‘காவாலா’ மற்றும் ‘இது டைகரின் கட்டளை’ பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

இந்நிலையில், ‘ஜெயிலர்’ படத்தின் ‘காவாலா’ பாடல் யூடியூப்பில் 70 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளதாக படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டது. இதனை தற்போது ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். ‘ஜெயிலர்’ படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூலை 28ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது.

Tags :
|
|