Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • மோட்டார்சைக்கிள் மாடல்களுக்கு அதிரடி சலுகை அறிவித்த கவாசகி நிறுவனம்

மோட்டார்சைக்கிள் மாடல்களுக்கு அதிரடி சலுகை அறிவித்த கவாசகி நிறுவனம்

By: Monisha Sat, 05 Dec 2020 5:12:19 PM

மோட்டார்சைக்கிள் மாடல்களுக்கு அதிரடி சலுகை அறிவித்த கவாசகி நிறுவனம்

கவாசகி நிறுவன விற்பனையாளர்கள் தேர்வு செய்யப்பட்ட மோட்டார்சைக்கிள் மாடல்களுக்கு அதிரடி சலுகைகளை அறிவித்துள்ளது.

கவாசகி நிறுவன விற்பனையாளர்கள் தேர்வு செய்யப்பட்ட மோட்டார்சைக்கிள் மாடல்களுக்கு ரூ. 50 ஆயிரம் வரை சலுகை வழங்கி வருகின்றனர். இந்த சலுகை டிசம்பர் 31 ஆம் தேதி வரை ஸ்டாக் இருப்பிற்கு ஏற்ப அமலில் இருக்கும் என கூறப்படுகிறது.

இந்த சலுகை வவுச்சர்கள் வடிவில் வழங்கப்படுகிறது. இவற்றை ரொக்க வடிவில் தள்ளுபடியாக பெறலாம். அதன்படி கவாசகி டபிள்யூ800 மாடலுக்கு ரூ. 30 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

motorcycle,offer,kawasaki company,discounts,vouchers ,மோட்டார்சைக்கிள்,சலுகை,கவாசகி நிறுவனம்,தள்ளுபடி,வவுச்சர்கள்

இதேபோன்று கவாசகி வல்கன் எஸ் மாடலுக்கு ரூ. 20 ஆயிரம், இசட்650 மாடலுக்கு ரூ. 30 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

கவாசகி வெர்சிஸ் 650 மாடலுக்கு ரூ. 30 ஆயிரமும், கேஎல்எக்ஸ் 110 மாடலுக்கு ரூ. 30 ஆயிரமும், கேஎல்எக்ஸ் 140 மாடலுக்கு ரூ. 40 ஆயிரம், கேஎக்ஸ் 100 மாடல் ரூ. 50 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஆண்டு இறுதியை முன்னிட்டு இந்த சலுகைகள் கவாசகி ஆன் ரோடு மற்றும் ஆப் ரோடு காம்படீஷன் மாடல்களுக்கும் அறிவிக்கப்பட்டு உள்ளன.

Tags :
|