Advertisement

ஜென்டில்மேன் 2 படத்திற்கு இசையமைப்பதில் பெருமை என்கிறார் கீரவாணி

By: Nagaraj Wed, 23 Aug 2023 8:30:57 PM

ஜென்டில்மேன் 2 படத்திற்கு இசையமைப்பதில் பெருமை என்கிறார் கீரவாணி

சென்னை: தமிழில் ஜென்டில்மேன் 2 படத்துக்கு இசையமைக்கிறார் இசையமைப்பாளர் கீரவாணி என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் கீரவாணி தமிழில் ஜென்டில்மேன் 2 படத்திற்கு இசையமைக்க உள்ளார். இதில் சேத்தன் சீனு ஹீரோவாகவும், நயன்தாரா சக்ரவர்த்தி ஹீரோயினாகவும் நடித்துள்ளனர். கேடி குஞ்சுமோன் தயாரித்துள்ளார். கீரவாணிக்கு பாராட்டு நிகழ்ச்சி நடந்தது.

இதில் பங்கேற்று மீண்டும் தமிழ் படத்துக்கு இசையமைப்பதற்காக நெகிழ்ந்தார். அவர் பேசும்போது, “தமிழ்நாட்டுக்கும், எனக்கும் நிறைய சம்பந்தம் உண்டு. என் தந்தை சென்னையில் பணி செய்தபோது என் தாயின் கருவில் உருவானவன் நான். அந்த வகையில் என்னுடையது தெலுங்கு உடலில் தமிழ் ஆன்மா என்பேன்.

gentleman-2,keeravani,movie,music composer,tamil, ,இசையமைப்பாளர், கீரவாணி, ஜென்டில்மேன்-2, தமிழ், படம்

22 வருடமாக சென்னையில்தான் இருந்தேன். அதன்பிறகு தொழில் நிமித்தம் காரணமாக ஐதராபாத்திற்கு மாறினேன். மீண்டும் தமிழ் படத்துக்கு இசையமைப்பது மகிழ்ச்சி. எனக்கு மிகவும் பிடித்த தமிழ் கவிஞர்கள் கண்ணதாசன், வாலி, வைரமுத்து. இவர்கள் மூவர் எழுதிய பாடல்களையும் கேட்கும்போது நமக்கு எனர்ஜி கிடைக்கும்.

இப்போதும் வானமே எல்லை படத்தின் பாடலைக் கேட்டால் மன அழுத்தம் ஓடிப்போய் விடுகிறது. நூறு சதவீதம் அர்ப்பணிப்புடன் இந்த படத்திற்கு என்ன செய்ய வேண்டுமோ அதை நிச்சயமாக கொடுப்பேன்” என்றார்.

Tags :
|
|