Advertisement

தியேட்டரில் படம் பார்க்கும் அனுபவம் குறித்து குஷ்பு

By: Monisha Fri, 02 Oct 2020 6:26:34 PM

தியேட்டரில் படம் பார்க்கும் அனுபவம் குறித்து குஷ்பு

ஊரடங்கு காரணமாக ஆறு மாதங்களுக்கு மேலாக மூடியிருந்த தியேட்டர்களை திறந்து கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. வரும் 15ம் தேதி தியேட்டர்கள் திறக்க இருக்கும் நிலையில் தியேட்டரில் படம் பார்க்கும் அனுபவம் குறித்து குஷ்பு அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது: "தியேட்டரில் நான் பார்த்த முதல் படம் தரம்வீர். அந்த படத்தை மும்பை அந்தேரியில் இருந்த நவ்ரங் சினிமா தியேட்டரில் பார்த்தேன்.

தரம்வீர் படம் 1877 ஆம் ஆண்டு வெளியானது. தர்மேந்திரா, ஜிதேந்திரா, ஜீனத் அமன் மற்றும் நீத்து சிங் போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருந்தார்கள். அப்போது எனக்கு வயது ஏழு. அந்த படத்தை ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்த நினைவு இன்னும் இருக்கிறது. அது நாட்டுப்புற வாழ்க்கை சார்ந்த ஒரு படமாக இருக்கும். நடிகர்கள் எல்லாம் ரோமன் போன உடைகள் அணிந்து இருப்பார்கள். பெரிய பட்ஜெட் படமும் கூட.

curfew,theaters,experience,khushboo,cinema ,ஊரடங்கு,தியேட்டர்கள்,அனுபவம்,குஷ்பு,சினிமா

பிரம்மாண்டமாக எடுக்கப்பட்ட அந்த படத்தை பெரிய திரையில் பார்த்த அனுபவம் அசாதாரணமானது. என்னை அம்மாதான் அழைத்துச் சென்றார். அதுதான் நான் தியேட்டரில் முதல் பார்த்த படம். மும்பையில் உள்ள மராத்தி மந்திரில் ஷோலே படத்தையும் பார்த்து ரசித்திருக்கிறேன். சென்னைக்கு வந்ததும் அண்ணாசாலை ஆனந்த தியேட்டரில் படம் பார்த்திருக்கிறேன். ஆனால் என்ன படம் என்று ஞாபகமில்லை. இங்கு படம் பார்த்த முதல் தியேட்டர் அதுதான்.

அடுத்து அண்ணாமலை, பிரம்மா படங்களை முதல்நாள் முதல் காட்சியில் பார்த்தேன், சின்னத்தம்பி படத்திற்கு பிறகுதான் இந்த அனுபவத்தைப் பெற்றேன், தற்போது தியேட்டருக்கு போகும் வாய்ப்பே கிடைப்பதில்லை, மக்கள் ஓடிடி தளத்தில் பார்த்து ரசிக்க தொடங்கி விட்டார்கள். ஆனால் தியேட்டருக்கு சென்று பெரிய திரையில் படம் பார்க்கும் அனுபவமே தனிதான்’. இவ்வாறு குஷ்பு கூறியுள்ளார்.

Tags :
|