Advertisement

காமெடி திரில்லர் படமாக உருவாகிறது கடத்தல் படம்

By: Nagaraj Fri, 30 June 2023 11:08:43 PM

காமெடி திரில்லர் படமாக உருவாகிறது கடத்தல் படம்

சென்னை: உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட காமெடி திரில்லர் படமாக கடத்தல் படம் தயாராகி வருகிறது.

உண்மை கடத்தல் சம்பவத்தை மையமாக வைத்து “கடத்தல்” என்ற புதிய படம் தயாராகிறது. எம்.ஆர்.தாமோதர் ஹீரோவாக அறிமுகமாகிறார். விதிஷா, ரியா கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.

சுதா, நிழல்கள் ரவி, சிங்கம்புலி, தமிழ்வாணன், ஆர்.ஜெயச்சந்திரன், ரவிகாந்த், ஆதி வெங்கடாசலம், கே.சபாபதி, சந்தோஷ், மோகன் ரெட்டி, மாஸ்டர் தருண், பிரவீன் ஆகியோரும் முக்கிய வேடங்களில் தோன்றுகின்றனர்.

fact,incident,kidnapping,movie, ,உண்மை, கடத்தல், சம்பவம், திரைப்படம்

இந்த படத்தை சலங்கை துரை இயக்குகிறார். படம் பற்றி அவர் கூறும்போது, “இது உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட காமெடி திரில்லர். நட்பை எப்படிப் பாதுகாக்க முடியும் என்பதற்கு இன்றைய இளைஞர்களே உதாரணம்.

தவறான நட்பால் தாய்க்கு எதிராக செயல்படும் இளைஞனின் கதைதான் படம். இது தற்போதைய இளைய தலைமுறைக்கு பாடமாகவும் அமையும்,” என்றார்.ஒளிப்பதிவு: ராஜ் செல்வா, இசை: எம்.ஸ்ரீகாந்த், தயாரிப்பு: செங்கோடன் துரைசாமி.

Tags :
|
|