- வீடு›
- பொழுதுபோக்கு›
- ஆங்கிலத்தில் வெளியானது கங்குவா படத்தின் கிளிம்பஸ் வீடியோ
ஆங்கிலத்தில் வெளியானது கங்குவா படத்தின் கிளிம்பஸ் வீடியோ
By: Nagaraj Tue, 25 July 2023 11:23:26 PM
சென்னை: ஆங்கிலத்தில் வெளியானது கங்குவா படத்தின் கிளிம்பஸ் வீடியோ. இது பிரமாண்டமாக உள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அண்ணாத்த திரைப்படத்திற்கு பின் சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் சூர்யா நடிக்கிறார். 'கங்குவா' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா படானி நடிக்கிறார்.
படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானலில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதன் ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் நிறுவனம் ரூ.80 கோடிக்கு வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.
Tags :
fans |
opinion |
english |
grandeur |