Advertisement

சன்னிலியோனுக்கு சீட் கொடுத்த கொல்கத்தா கல்லூரி

By: Monisha Sat, 29 Aug 2020 12:15:37 PM

சன்னிலியோனுக்கு சீட் கொடுத்த கொல்கத்தா கல்லூரி

கொல்கத்தாவில் உள்ள கல்லூரி ஒன்றில் நடிகை சன்னி லியோனிக்கு சீட் கொடுத்து உள்ளதற்கு சன்னி லியோன் டுவிட்டரில் அடித்த கமெண்ட் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள கொல்கத்தாவில் உள்ள தனியார் கல்லூரி ஒன்று நேற்று பிஏ ஆங்கில படிப்பிற்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் பிரபல நடிகை சன்னி லியோனின் பெயர் முதலிடத்தில் இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் நடிகை சன்னி லியோன் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் நான்கு பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்று வந்ததாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

sunny leone,kolkata,private college,twitter,comment ,சன்னி லியோனி,கொல்கத்தா,தனியார் கல்லூரி,டுவிட்டர்,கமெண்ட்

இதுகுறித்து கல்லூரி நிர்வாகம் அளித்த விளக்கத்தில் சன்னி லியோன் பெயரில் யாரோ மர்ம நபர்கள் விண்ணப்பத்தை சமர்ப்பித்துள்ளதாகவும், அதை சரி செய்யுமாறு சம்பந்தப்பட்ட துறைக்கு உத்தரவு பிறப்பித்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சன்னி லியோன் காமெடியாக தனது டுவிட்டர் பக்கத்தில் 'உங்கள் அனைவரையும் அடுத்த செமஸ்டர் தேர்வில் சந்திக்க காத்திருக்கிறேன். எனது வகுப்பில் நீங்களும் இடம் பெறுவீர்கள் என நம்புகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags :