Advertisement

கார்த்தியின் நல்ல குணம்... பாராட்டும் கோலிவுட்

By: Nagaraj Fri, 29 July 2022 2:44:25 PM

கார்த்தியின் நல்ல குணம்... பாராட்டும் கோலிவுட்

சென்னை: நடிகர் கார்த்தி அமீரின் தாயார் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டாராம். ஏற்கனவே அமீருடன் பிரச்சனை இருந்தாலும் பழசை மறக்காத கார்த்தி அந்த துக்க நிகழ்வில் கலந்து கொண்டுள்ளது அவருடைய நல்ல குணத்தை காண்பிக்கிறது.

சூர்யாவின் மௌனம் பேசியதே படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் இயக்குனர் அமீர். தொடர்ந்து வித்தியாசமான படங்களை மக்களுக்கு கொடுத்து வந்தார்.

அந்த வகையில் நடிகர் கார்த்தியின் அறிமுகப் படமான பருத்திவீரன் படத்தை இயக்கி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய கவனத்தை பெற்றிருந்தார். முதல் படத்திலேயே கார்த்திக்கு மிகப்பெரிய அங்கீகாரம் கிடைத்தது. அதுமட்டுமல்லாமல் இப்படத்தில் முத்தழகு கதாபாத்திரத்தில் நடித்ததற்காக பிரியாமணிக்கு தேசிய விருது கிடைத்தது. ஆனால் கார்த்தி, அமீர் இடையே ஏதோ ஒரு பிரச்சனை நிலவி வந்தது. அதனால் சில காலம் இவர்கள் பேசாமல் இருந்தனர்.

aamir,surya,karthi,sad news,sodai pogatu,irangal ,அமீர், சூர்யா, கார்த்தி, துக்க செய்தி, சோடை போகாது, இரங்கல்

இந்நிலையில் சமீபத்தில் இயக்குனர் அமீரின் தாயார் தவறிவிட்டார். இந்த இறப்புச்செய்தி சினிமாத் துறையில் உள்ள பலருக்கும் தெரியப்படுத்தவில்லை. இந்த விஷயம் தெரிந்தவுடன் பாலா மற்றும் அமீர் மதுரையில் இறுதி சடங்கு செய்வதற்காக சென்றுவிட்டனர்.

ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக திடீரென செய்தி அறிந்த கார்த்தி அமீரின் தாயார் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டாராம். ஏற்கனவே அமீருடன் பிரச்சனை இருந்தாலும் பழசை மறக்காத கார்த்தி அந்த துக்க நிகழ்வில் கலந்து கொண்டது அவருடைய நல்ல குணத்தை காண்பிக்கிறது.

நாம் சந்தோசமாக இருக்கும் போது பலர் இருந்தாலும் நம்முடைய சோகமான நாட்களில் யார் கூட இருக்கிறார்களோ அவர்கள் தான் உண்மையான நண்பர்கள் என்பார்கள். அதேபோல் கார்த்தி அமீரின் இந்த இக்கட்டான சூழ்நிலையில் தனது இரங்கலை நேரில் வந்த தெரிவித்து சென்றுள்ளார்.

அதுமட்டுமின்றி சூர்யாவும் அமீருக்கு போன் போட்ட தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து இருக்கிறார். இவ்வாறு சூர்யா மற்றும் கார்த்தி இருவருமே அமீரை தனது சொந்த அண்ணன் போல் பாவிக்கின்றனர். மேலும் சூர்யா, கார்த்தி இருவருமே சிவகுமாரின் வளர்ப்பு எப்போதுமே சோடை போகாது என்பதை மீண்டும் நிரூபித்துள்ளனர்.

Tags :
|
|
|