Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • 20 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஒரு திரைப்படத்தை தயாரிக்கும் கே.எஸ். ரவிக்குமார்!

20 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஒரு திரைப்படத்தை தயாரிக்கும் கே.எஸ். ரவிக்குமார்!

By: Monisha Mon, 02 Nov 2020 7:00:29 PM

20 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஒரு திரைப்படத்தை தயாரிக்கும் கே.எஸ். ரவிக்குமார்!

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரும், ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், விஜய், சூர்யா உள்பட பல பிரபலங்களின் திரைப்படங்களை இயக்கிவருமான கே.எஸ். ரவிக்குமார், 20 ஆண்டுகள் கழித்து மீண்டும் தயாரிப்பாளராக இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

கடந்த 2000ம் ஆண்டு கமலஹாசன், தேவயானி, ஜோதிகா நடிப்பில் ஏஆர் ரஹ்மான் இசையில் உருவான திரைப்படம் 'தெனாலி'. இந்த திரைப்படத்தை கேஎஸ் ரவிக்குமார் தயாரித்து இயக்கி இருந்த நிலையில் தற்போது 20 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஒரு திரைப்படத்தை தயாரிக்க அவர் திட்டமிட்டுள்ளார்

மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான 'ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்' என்ற படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை கேஎஸ் ரவிக்குமார் வாங்கி இருப்பதாகவும், இந்த படத்தைதான் அவர் தயாரிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.

ks ravikumar,film,producer,tamil remake,malayalam ,கே.எஸ் ரவிக்குமார்,திரைப்படம்,தயாரிப்பாளர்,தமிழ் ரீமேக்,மலையாளம்

இந்த படத்தை கே எஸ் ரவிக்குமாரின் உதவியாளராக இருந்த ஒருவர் இயக்கப் போவதாகவும் இந்த படத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தகவல் இன்னும் ஒரு சில நாட்களில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

வெளிநாட்டுக்கு வேலைக்குச் செல்லும் இளைஞரொருவர் தந்தையை தனியே விட்டு பிரிய மனமில்லாமல் அவரையும் அழைத்துச் செல்கிறார். ஆனால் வெளிநாட்டில் தந்தை தனியே இருப்பதை பார்த்து மனம் வருத்தம் அடைந்த அவர், தந்தைக்கு துணையாக நவீன ரோபோ ஒன்றை வாங்கித் தருகிறார். அந்த ரோபோவுக்கும் தந்தைக்கும் இடையே ஏற்படும் உறவு மற்றும் பிணைப்பு எப்படி என்பதுதான் 'ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்' படத்தின் கதை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
|