Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் அதிரடி நடிப்பில் நெற்றிக்கண்... இன்று வெளியாகிய டீசர்!

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் அதிரடி நடிப்பில் நெற்றிக்கண்... இன்று வெளியாகிய டீசர்!

By: Monisha Wed, 18 Nov 2020 3:08:04 PM

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் அதிரடி நடிப்பில் நெற்றிக்கண்... இன்று வெளியாகிய டீசர்!

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடித்துவரும் திரைப்படங்களில் ஒன்று 'நெற்றிக்கண்'. இந்த திரைப்படத்தின் டீசர் இன்று வெளியாகி உள்ளது.

இந்த டீசரில் நயன்தாரா பார்வையற்ற மாற்றுத்திறனாளி வேடத்தில் நடித்திருக்கிறார். டீசரை பார்க்கும்போதே அதிரடி ஆக்ஷன் மற்றும் த்ரில் கதையம்சம் உள்ள படம் என்று தெரிகிறது. மேலும் இந்த திரைப்படத்தின் டீசரில், "ஒரு ஊரில் பாவப்பட்ட ஆட்டுக்குட்டிகள் நிறைய இருந்தது என்றும் அது தெரிஞ்சிக்கிட்ட ஒரு கெட்ட நரி அதோட வேலையை காட்டிக்கொண்டு இருந்துச்சு என்றும், அப்போ ஒரு தைரியமான ஆடு, நரிக்கு ஒரு குழியைத் தோண்டியது என்றும், அந்த நரியும் நல்லபடியா வந்து குழியும் விழுந்துச்சாம்" என்றும் ஆடு, நரி கதையை நயன்தாரா கேரக்டர் கூறும் வகையில் இந்த டீசர் அமைக்கப்பட்டுள்ளது.

nayanthara,netrikan,teaser,blind,thrill ,நயன்தாரா,நெற்றிக்கண்,டீசர்,பார்வையற்ற மாற்றுத்திறனாளி,த்ரில்

அதிரடி ஆக்சன் மற்றும் த்ரில் காட்சிகளும், நயன்தாராவின் அபாரமான நடிப்பையும் பார்க்கும்போது இந்த படம் வேற லெவலுக்கு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் முறையாக நயன்தாரா பார்வை தெரியாத மாற்றுத்திறனாளியாக நடித்துள்ள இந்த படம் அவரது திரையுலக வாழ்வில் மேலும் ஒரு மைல்கல்லாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நயன்தாரா, அஜ்மல், மணிகண்டன் உள்பட பலர் நடித்துள்ள இந்த திரைப்படத்தை மிலிந்த் ராவ் இயக்கியுள்ளார். விக்னேஷ் சிவன் தயாரிப்பில் கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையில் லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பில் ராஜசேகர் ஒளிப்பதிவில் இந்த படம் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
|
|