- வீடு›
- பொழுதுபோக்கு›
- மீண்டும் காஞ்சனா...லட்சுமி பாம் திரைப்படம் விரைவில் ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது!
மீண்டும் காஞ்சனா...லட்சுமி பாம் திரைப்படம் விரைவில் ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது!
By: Monisha Tue, 30 June 2020 1:07:44 PM
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டு இன்றுடன் 101 நாட்கள் ஆகிறது. திரையரங்குகள் மூடப்பட்டு இருப்பதால், ரிலீஸ்க்கு தயாராக உள்ள படங்களை வெளியிட முடியாமல் தயாரிப்பாளர்கள் பெரும் நஷ்டத்தில் இருக்கிறார்கள். மேலும் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளது
இதனால், ரிலீஸ்க்கு தயாராகி இருக்கும் படங்கள் சிலவற்றை ஓடிடி தளத்தில் வெளியிட்டு வருகின்றன. இதில் தமிழ்த் திரையுலகிலிருந்து முதலாவதாக ஜோதிகா நடித்த 'பொன்மகள் வந்தாள்' திரைப்படம் வெளியானது. அதனைத் தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் நடித்த 'பெண்குயின்' வெளியானது. இதை போன்று பாலிவுட் உட்பட பல மொழிகளிலும் பல முன்னணி நடிகர் நடிகைகளின் திரைப்படங்கள் ஒடிடியில் ரிலீஸ் ஆயின.
இந்த நிலையில் ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் அக்ஷய்குமார் நடிப்பில் உருவாகி வந்த ’லட்சுமி பாம்’ என்ற திரைப்படம் ஓடிடியில் வெளியாக இருப்பதாக தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ராகவா லாரன்ஸ் தனது சமூக வலைதளத்தில் ‘லட்சுமி பாம்’ படத்தின் முதல் நாள் முதல் காட்சியை நீங்கள் வீட்டில் இருந்து சந்தோசமாக கண்டு களியுங்கள் என்று கூறி இந்த திரைப்படம் விரைவில் ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
அக்ஷய்குமார், கைரா அத்வானி உள்பட பலர் நடித்துள்ள இந்த திரைப்படம் தமிழில் வெளியான ’காஞ்சனா’ திரை படத்தின் இந்தி ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னணி நடிகர்களின் படங்களே ஓடிடியில் ரிலீஸ் ஆவதால் தியேட்டர் அதிபர்கள் கலக்கத்தில் உள்ளனர்.