Advertisement

பிக்பாஸ் நிகழ்ச்சியில் லட்சுமிமேனன் இல்லை

By: Monisha Thu, 24 Sept 2020 5:29:19 PM

பிக்பாஸ் நிகழ்ச்சியில் லட்சுமிமேனன் இல்லை

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி வரும் அக்டோபர் 4ம் தேதி முதல் தொடங்க இருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கும் போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கின்றன

இப்போதைக்கு ஷிவானி நாராயணன், ரியோ ராஜ் ஆகியோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது குறித்த புகைப்படங்கள் லீக் ஆனதால் இவர்கள் இருவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் உறுதி செய்யப்பட்டுள்ளனர். மற்ற ஒரு சிலரும் தனிமைப்படுத்தப்பட்டு விட்டதாக செய்திகள் வெளிவந்தாலும் அது 100% உறுதி செய்யப்படவில்லை.

big boss show,lakshmi menon,kamal haasan,isolation,rumor ,பிக்பாஸ் நிகழ்ச்சி,லட்சுமிமேனன்,கமல்ஹாசன்,தனிமைப்படுத்தல்,வதந்தி

இந்த நிலையில் நடிகை லட்சுமிமேனன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாகவும் அவரும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் செய்திகள் வெளியானது. ஆனால் இந்த செய்தியை அவர் தற்போது மறுத்துள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்ளவில்லை என்றும் நான் கலந்துகொள்ள இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் வதந்தி என்றும் அவர் கூறியுள்ளார். இதனை அடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் லட்சுமிமேனன் இல்லை என்பது உறுதியாகி உள்ளது.

Tags :