Advertisement

லியோ 5 நாட்கள் வசூல்

By: vaithegi Wed, 25 Oct 2023 09:46:08 AM

லியோ 5 நாட்கள் வசூல்

விஜய்யின் ‘லியோ’ திரைப்படம் உலக பாக்ஸ் ஆபிஸில் புதிய சாதனையைப் படைத்துள்ளது. 19ம் தேதி வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப்பெற்று, 5 நாட்களிலேயே ரூ.450 கோடி வசூல் செய்து அசத்தியுள்ளது.

ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த திரைப்படம் நல்ல விமர்சனத்தை பெற்று வசூல் ரீதியாக பல சாதனைகளை படைத்தது கொண்டு வருகிறது. அதிலும் குறிப்பாக, இந்த திரைப்படம் சொந்த நாடுகளை தவிர்த்து மற்ற நாடுகளில், இதற்கு முன்னதாக வசூல் சாதனை செய்திருக்கும் படங்களின் வசூலை முறியடித்து உலக பாக்ஸ் ஆபிஸையே ஒரு கலக்கு கலக்கியிருக்கிறது.

collection,leo ,வசூல்,லியோ

லியோ வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ.148 கோடி வசூல் செய்து முதல் நாளில் அதிகம் வசூல் செய்த தமிழ் திரைப்படம் என்ற சாதனையை படைத்திருந்தது. உலகம் முழுவதும் இப்படம் ரூ.450 கோடி வசூலை கடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் ஐந்தாவது நாளான நேற்று கிட்டத்தட்ட ரூ 50 கோடி வசூலித்ததாக கூறப்படுகிறது. 4 நாட்களில் ரூ.400 கோடியை கடந்த நிலையில், 5 நாட்களில் ரூ.450 கோடியை எட்டியிருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

அந்த வகையில், இந்த வசூலில் தமிழ்நாட்டில் மட்டும் இப்படம் ரூ.100 கோடி வசூல் செய்திருக்கும் என்றும், இந்திய அளவில் ரூ.200 கோடியை தாண்டியிருக்கும் என கூறப்படுகிறது. மேலும், தமிழ்நாட்டை போலவே, கேரளாவில் ரூ.40 கோடி வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.ஆனால், படக்குழு இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்னும் வெளியிடவில்லை. முதல் வசூலை மட்டும் வெளியிட்டது.

Tags :