Advertisement

லியோஅதிகாலை சிறப்பு காட்சி ..நாளை உயர்நீதிமன்றத்தில் விசாரணை

By: vaithegi Mon, 16 Oct 2023 4:05:08 PM

லியோஅதிகாலை சிறப்பு காட்சி ..நாளை உயர்நீதிமன்றத்தில் விசாரணை

நடிகர் விஜய் நடித்து உள்ள ‘லியோ’ திரைப்படத்திற்கு அதிகாலை 4 மணி சிறப்பு காட்சிக்கு அனுமதிக்க வேண்டும் எனவும், காலை 9 மணிக்கு பதிலாக 7 மணிக்கே திரையிட அனுமதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் பட தயாரிப்பு நிறுவனம் வழக்கு ஒன்றை தொடர்ந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று மதியம் 1 மணிக்கு நீதிபதி அனிதா சுமந்த் முன்பு விசாரணைக்கு வந்தது. இதையடுத்து அப்போது, வரும் 19-ம் தேதியன்று 6 காட்சிகளுக்கு அனுமதி கேட்டோம், ஆனால் 5 காட்சிகளுக்கு மட்டும் தான் அனுமதி அளிக்கப்பட்டது என தயாரிப்பு நிறுவன தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

trial,high court,leo,early morning special ,விசாரணை,உயர்நீதிமன்றம்,லியோ,அதிகாலை சிறப்பு காட்சி

இதற்கு பதிலளிக்கும் வகையில் அரசு தலைமை வழக்கறிஞர் கூறுகையில், அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதியளிப்பதில் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு சிக்கல்கள் உள்ளன. ஏற்கனவே, ரசிகர்கள் காட்சிக்கு அனுமதி அளிக்க கூடாது என மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.

இந்நிலையில், ‘லியோ’ திரைப்படத்திற்கு அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதி கோரிய வழக்கின் விசாரணை நாளை ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. நாளை காலை முதல் வழக்காக விசாரிக்கப்படும் என்று நீதிபதி அனிதா சுமந்த் தெரிவித்துள்ளார்.

Tags :
|
|