Advertisement

ரஜினியின் 2.0 வெளிநாட்டு வசூலை முறியடித்தது லியோ படம்

By: Nagaraj Wed, 01 Nov 2023 2:26:56 PM

ரஜினியின் 2.0 வெளிநாட்டு வசூலை முறியடித்தது லியோ படம்

சென்னை: ரஜினியின் 2.0 வெளிநாட்டு வசூலை முறியடித்துள்ளது நடிகர் விஜய்யின் லியோ படம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் லியோ படம் கடந்த 19 ம் தேதி ஐந்து மொழிகளில் வெளியானது. இப்படத்திற்கு ரசிகர்கள் கலவையான விமர்சனம் கொடுத்தாலும் வசூல் ரீதியாக பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறது.

jailer,2.0 movie,foreign collection,actor vijay,leo collection ,ஜெயிலர், 2.0 படம், வெளிநாட்டு வசூல், நடிகர் விஜய், லியோ வசூல்

இந்நிலையில் விஜய்யின் லியோ படம் வெளிநாட்டில் ரூபாய் 184 கோடி வசூல் செய்து ரஜினியின் 2.O படத்தின் சாதனையை முறியடித்துள்ளது.

லியோ படம் ஜெயிலர் படத்தின் வெளிநாட்டு வசூலை முறியடிக்க இன்னும் 16 கோடி வசூல் செய்ய வேண்டும் என்று சினிமா வட்டாரங்களில் தகவல் தெரிவிக்கின்றது.

Tags :
|