- வீடு›
- பொழுதுபோக்கு›
- லியோ ....கேரளா மற்றும் கர்நாடகாவில் மட்டும் ரூ.20 கோடி வசூல்
லியோ ....கேரளா மற்றும் கர்நாடகாவில் மட்டும் ரூ.20 கோடி வசூல்
By: vaithegi Sat, 21 Oct 2023 4:10:47 PM
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி இருந்த இந்த ‘லியோ’ திரைப்படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே நேற்று முன்தினம் (கடந்த 19-ஆம் தேதி) தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியானது. லியோ படம் வெளியான 2 நாளில் உலகம் முழுவதும் ரூ.210 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், நேற்றைய தினம், இந்த திரைப்படம் வெளியான முதல் நாளில் மட்டும் உலகம் முழுவதும் ரூ.148 கோடி வசூல் செய்திருந்தது என தயாரிப்பு நிறுவனமே அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதன் காரணமாக வரும் நாட்கள் விடுமுறை என்பதால, வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழில் எந்த அளவுக்கு வரவேற்பு பெற்றுள்ளதோ அதெ அளவில், கேரளா மற்றும் கர்நாடகாவில் வரவேற்பு பெற்றுள்ளது. அந்த வகையில், தமிழ் திரைப்படங்களில் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற சாதனையையும், கேரளாவில் முதல் நாளில் அதிகம் வசூல் செய்த தமிழ் திரைப்படம் என்கிற சாதனையும் லியோ படம் படைத்துள்ளது.
எனவே அதன்படி, கேரளாவில் முதல் நாளில் ரூ.12 கோடி வசூல் செய்து மிகப்பெரிய சாதனை படைத்தது. மேலும், 2-ம் நாளான நேற்று ரூ.6.85 கோடி வசூலித்து மொத்தமாக ரூ.18.85 கோடி வசூல் செய்துள்ளது.
இதனையடுத்து, கர்நாடகாவில் பார்க்கையில் முதல் நாளில் ரூ.13.65 கோடியும் இரண்டாம் நாளில் ரூ.2.9 கோடி என மொத்தம் ரூ.16.55 கோடி வசூலித்துள்ளது. இன்றைய பாக்ஸ் ஆபிஸை கணக்கிட்டால் இரு மாநிலங்களிலும் ரூ.20 கோடி வசூல் செய்து புதிய சாதனையை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.