Advertisement

வெளிநாடுகளில் ஜெயிலர் படத்தின் வசூலை பின்னுக்கு தள்ளிய லியோ படம்

By: Nagaraj Fri, 03 Nov 2023 7:11:51 PM

வெளிநாடுகளில் ஜெயிலர் படத்தின் வசூலை பின்னுக்கு தள்ளிய லியோ படம்

சென்னை: கல்ப் நாடுகளில் ஜெயிலர் படத்தின் வசூலை பின்தள்ளி விஜய்யின் லியோ படம் புதிய சாதனை படைத்துள்ளது.

விஜய்யின் லியோ படத்தின் வசூல் ரஜினியின் ஜெயிலர் படத்தின் வசூலை முறியடிக்குமா என தொடர்ந்து கேள்விகள் எழுந்து வருகிறது. படம் வெளிவருவதற்கு முன் இருந்தே இந்த கேள்வி இணையத்தில் வைரலாக இருந்தது என்பது அனைவரும் அறிந்தது தான்.

முதல் நாள் வசூல் மாபெரும் அளவில் இருந்த நிலையில் கலவையான விமர்சனங்கள் லியோ படத்தின் வசூலை சற்று குறைக்க துவங்கியுள்ளது. இதனால் உலகளவில் ஜெயிலர் படத்தின் வசூலை லியோ முறியடிக்க வாய்ப்பு குறைவு என்ற பேச்சு எழுந்து வருகிறது.

leo movie,jailer,gulf nations,collection hunt,pushed back ,லியோ படம், ஜெயிலர், கல்ப் நாடுகள், வசூல் வேட்டை, பின்னுக்கு தள்ளியது

ஆனால், முக்கியமான இடங்களில் ஜெயிலர் படத்தின் வசூலை லியோ படம் முறியடித்துள்ளது. இந்நிலையில் தற்போது கல்ப் நாடுகளில் ஜெயிலர் படத்தின் மொத்த வசூலையும் பின்னுக்கு தள்ளியுள்ளது லியோ. ஜெயிலர் படம் Gulf Countries-ல் ரூ. 54.5 கோடி வரை மட்டுமே வசூல் செய்திருந்தது.

ஆனால், தற்போது லியோ ரூ. 55 கோடிக்கும் மேல் வசூல் செய்து ஜெயிலர் படத்தின் வசூல் சாதனையை பின்னுக்கு தள்ளியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
|