- வீடு›
- பொழுதுபோக்கு›
- தமிழகத்தில் மட்டும் ரூ.166 கோடி வரை வசூல் வேட்டை நடத்தியுள்ள லியோ
தமிழகத்தில் மட்டும் ரூ.166 கோடி வரை வசூல் வேட்டை நடத்தியுள்ள லியோ
By: Nagaraj Sun, 29 Oct 2023 2:21:33 PM
சென்னை: தமிழகத்தில் அனைத்து திரையரங்குகளிலும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நடிகர் விஜய் நடித்துள்ள லியோ படம் இதுவரை ரூ. 166 கோடி வரை வசூலித்துள்ளதாம்.
கடந்த அக்டோபர் 19ம் தேதி தமிழ் சினிமாவில் வெளியான பெரிய நடிகரின் படம் என்றால் விஜய்யின் லியோ தான்.
லோகேஷ் கனகராஜ் இயக்க அனிருத் இசையமைக்க செவன் ஸ்கிரின் ஸ்டூடியோ தயாரித்துள்ள இப்படம் முதல் நாளில் மட்டுமே ரூ. 148 கோடி வரை வசூலித்திருந்தது. இப்போது உலகம் முழுவதும் ரூ. 450 கோடிக்கு மேல் வசூலித்து வருகிறது.
வார நாட்களில் படத்தின் வசூல் சுத்தமாக குறைந்துள்ளதால் வார இறுதியில் கண்டிப்பாக படத்தின் வசூல் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. தமிழகத்தில் எல்லா திரையரங்குகளிலும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் இப்படம் இதுவரை ரூ. 166 கோடி வரை வசூலித்துள்ளதாம்.