Advertisement

லியோ படத்திற்கு வந்த புதிய சிக்கல்

By: vaithegi Wed, 11 Oct 2023 10:00:34 AM

லியோ படத்திற்கு வந்த புதிய சிக்கல்

லியோ படத்திற்காக நான் ரெடி தான் பாடலில் நடனமாடிய சுமார் 1300 நடன கலைஞர்களுக்கு சுமார் 4 மாசங்களாகியும் இன்னும் பேசிய சம்பளம் வரவில்லை எனபுகார் ..நடிகர் விஜய், இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் கூட்டணி அமைத்து தயாராகி வரும் திரைப்படம் 'லியோ'. இந்த படத்தில் அவருக்கு ஜோடியா திரிஷா நடித்து உள்ளார். ஆக்ஷன் அதிரடியில் உருவாகும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இதனை அடுத்து இப்படத்தில் சஞ்சய் தத், மிஸ்கின், சாண்டி மாஸ்டர், பிரியா ஆனந்த் என பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிந்து தற்போது பின்னணி வேலைகள் நடைபெற்று கொண்டு வருகின்றன.

trouble,leo ,சிக்கல்,லியோ

வருகிற 19 ஆம் தேதி லியோ திரைப்படம் திரைக்கு வரவுள்ள நிலையில், அப்படத்திற்கு புதிய சிக்கல்ஒன்று எழுந்துள்ளது. லியோ படத்திற்காக நான் ரெடி தான் பாடலில் நடனமாடிய சுமார் 1300 நடன கலைஞர்களுக்கு சுமார் 4 மாசங்களாகியும் இன்னும் பேசிய சம்பளம் வரவில்லை என்று சிலர் புகார் அளித்துள்ளனர். 1 நாள் ஒன்றுக்கு 2500 ரூபாய் சம்பளம் பேசப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று லியோ படத்தின் தயாரிப்பு நிறுவனத்தை அணுகிய டான்சர்கள், 4 மாதமாகியும் இன்னும் சம்பளம் வராமல் உள்ளது என தங்கள் கோரிக்கைகளை முன்வைத்து உள்ளனர். ஆனால் தயாரிப்பு நிறுவனம், டான்சர்கள் சங்கத்தில் இதுகுறித்து பேசியுள்ளோம் எனவும், அங்கு தான் சென்று டான்சர்கள் பேச வேண்டும் எனவும் சொல்லி அனுப்பியதாக தெரிகிறது.

Tags :