- வீடு›
- பொழுதுபோக்கு›
- லியோ திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகும் தேதி வெளியீடு
லியோ திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகும் தேதி வெளியீடு
By: vaithegi Mon, 20 Nov 2023 3:55:42 PM
வரும் நவம்பர் 24-ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது ....லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் ஆன லியோ திரைப்படம் எப்போது ஓடிடியில் வெளியாகும் என்ற அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. படம் திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் கடந்த அக்டோபர் 19-ஆம் தேதி வெளியானது.
திரையரங்குகளில் வெளியாகி இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வசூல் ரீதியாக மிகப்பெரிய ஹிட் ஆனது. வசூல் ரீதியாக மட்டும் படம் உலகம் முழுவதும் 600 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து இன்னும் சில திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிகொண்டு இருக்கிறது.
படம் திரையரங்குகளில் பார்க்காத ரசிகர்கள் எப்போது ஓடிடியில் வெளியாகும் என ஆவலுடன் காத்திருந்த நிலையில், தற்போது அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இதையடுத்து அதன்படி, லியோ திரைப்படம் வரும் நவம்பர் 24-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
லியோ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளதால் படத்தை திரையரங்குகளில் பார்க்காத ரசிகர்கள் ஓடிடியில் பார்க்க பெரும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். மேலும், லியோ படத்தை நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளம் 120 கோடிகள் கொடுத்து படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பே வாங்கியது.