Advertisement

லியோ திரைப்படத்தின் தெலுங்கு பதிப்பு ரிலீஸ் சிக்கல் இல்லை

By: vaithegi Wed, 18 Oct 2023 09:51:28 AM

லியோ திரைப்படத்தின் தெலுங்கு பதிப்பு ரிலீஸ் சிக்கல் இல்லை

நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் லியோ . திரிஷா, கௌதம் வாசுதேவ் மேனன், அர்ஜூன், மிஷ்கின், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான் ,சஞ்சய் தத் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்து உள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார்.

இதனையடுத்து செவன் ஸ்கிரீன் நிறுவனம் இப்படத்தை தயாரித்து உள்ள நிலையில் நாளை மறுநாள் லியோ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் படம் வெளியாகவுள்ளது.

release,leo,telugu version ,ரிலீஸ் ,லியோ ,தெலுங்கு பதிப்பு

இச்சூழலில் லியோ படத்தின் தலைப்பு பிரச்சனை தொடர்பாக தெலுங்கு பதிப்பை வரும் அக்டோபர் 20ம் தேதி வெளியிட தடை விதிக்கப்பட்டது. 'டி' ஸ்டுடியோ என்ற நிறுவனம் தொடர்ந்த வழக்கில் தெலுங்கானா உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இந்த நிலையில் லியோ தயாரிப்பு நிறுவனம் டி ஸ்டுடியோசிடம் நடத்திய பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்த நிலையில், லியோ திரைப்படத்தின் தெலுங்கு பதிப்பு திட்டமிட்டபடி நாளை வெளியாகிறது.

Tags :
|