Advertisement

ஜெயிலர் வசூலை முந்தியுள்ளது லியோ

By: vaithegi Fri, 27 Oct 2023 3:28:24 PM

ஜெயிலர் வசூலை முந்தியுள்ளது லியோ

லியோ திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்று வசூல் ரீதியாக பல சாதனைகளை படைத்தது வருகிறது ...விஜய்யின் ‘லியோ’ திரைப்படம் உலக பாக்ஸ் ஆபிஸில் புதிய சாதனையைப் படைத்து உள்ளது. விஜய் – லோகேஷ் கூட்டணியில் உருவாகி சமீபத்தில் வெளிவந்த லியோ திரைப்படம் 7 நாட்களில் ரூ.461 கோடி வசூல் செய்திருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.

கடந்த அக்டோபர் 19ஆம் தேதி வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று இரண்டாவது வாரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த திரைப்படம் வெளியான முதல் நாளிலேயே ரூ.148.5 கோடிகளை வசூலித்தது. மேலும், கேரளாவில் ரூ.40 கோடிகளை கடந்தது . மேலும் அது மட்டும் இல்லாமல், வெளிநாடு பாக்ஸ் ஆபிஸிலும் இப்படம் பெரும் சாதனை படைத்தது. அதன்படி, UK பாக்ஸ் ஆபிஸில் ரூ. 12 கோடி (£1.4 மில்லியன்) வசூலித்து அதிக வசூல் செய்த தமிழ்த் திரைப்படமாக மாறியுள்ளது.

leo,the jailer ,லியோ ,ஜெயிலர்


மேலும், அமெரிக்காவில் ரூ.41.5 கோடியை ($5 மில்லியன்) எட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இப்படி, எல்லா இடங்களிலும் வசூலை குவித்து உலக முழுவதும் இந்த திரைப்படம் 7 நாட்களில் ரூ.461 கோடி வசூல் செய்திருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

இந்த நிலையில், இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 9ம் தேதி அன்று வெளியானது. ஜெயிலர் வெளியாகி ஒரு வாரத்தில் (7 நாட்கள்) ரூ.375 கோடி வசூல் செய்திருந்தது. ஆனால், விஜய்யின் லியோ திரைப்படம் ஒரு வாரத்தில் ரூ.461 கோடி வசூல் செய்து அந்த சாதனையை முறியடித்துள்ளது.

Tags :
|