Advertisement

லியோ வெற்றிவிழா.. பாஸ் மற்றும் ஆதார் இல்லாதவர்களுக்கு அனுமதி இல்லை

By: vaithegi Tue, 31 Oct 2023 4:14:38 PM

லியோ வெற்றிவிழா..  பாஸ் மற்றும் ஆதார் இல்லாதவர்களுக்கு அனுமதி இல்லை

லியோ படத்தின் பிரம்மாண்டமான வெற்றிவிழாவை நடத்த திட்டமிட்டு உள்ள படக்குழு சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நாளை (நவம்பர் 1ஆம் தேதி) கொண்டாட இருப்பதாகவும், அதற்கான ஏற்பாடுகளை அரங்கில் தீவிரமாக செய்து கொண்டு வருகின்றனர். இதையடுத்து அதன்படி, இந்த விழா நாளை மாலை 6 மணி முதல் 11 மணி வரை நடைபெறுகிறது.

இந்த விழாவில் தளபதி விஜய் உட்பட சில முக்கிய பிரபலங்கள் கலந்துக்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த விழாவில் நடிகர் விஜய் ஏதேனும் குட்டி ஸ்டோரி சொல்லுவாரா என்று தளபதி ரசிகர்கள் பெரும் ஆவலுடன் காத்திருக்கிருக்கிறார்கள். முன்னதாக, நடைபெற இருந்த இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறவில்லை என்பதால், இந்த வெற்றி விழாவை காண எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

leo,permission ,லியோ ,அனுமதி

இந்த வெற்றி விழாவில் பங்கேற்க வருபவர்கள் அனுமதி டிக்கெட் உடன் ஆதாரை கட்டாயம் எடுத்து வர வேண்டும் என்றும் ஆதார் இல்லையென்றால் அனுமதியில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஸ் உடன் ரசிகர் மன்ற அட்டை மற்றும் ஆதார் அட்டை கொண்டு வரும் ரசிகர்கள் நாளை மாலை 4 மணி முதல் அரங்கத்திற்குள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

இந்த விழாவுக்கு காவல்துறையின் பாதுகாப்பு கேட்டு லியோ படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார் பெரியமேடு காவல் நிலையத்தில் கடிதம் கொடுத்திருந்தார். அதற்கு காவல்துறை தரப்பில் நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக, லியோ படத்தின் வெற்றி விழாக்கான டிக்கெட்கள், ஆன்லைனில் மட்டுமே விற்பனை செய்ய படக்குழு முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாம்.



Tags :
|