Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • பட்டையை கிளப்பி இருக்கும் லியோ விஜய்... முதல் விமர்சனம் வெளியாகி ரசிகர்கள் உற்சாகம்

பட்டையை கிளப்பி இருக்கும் லியோ விஜய்... முதல் விமர்சனம் வெளியாகி ரசிகர்கள் உற்சாகம்

By: Nagaraj Thu, 19 Oct 2023 07:09:05 AM

பட்டையை கிளப்பி இருக்கும் லியோ விஜய்... முதல் விமர்சனம் வெளியாகி ரசிகர்கள் உற்சாகம்

சென்னை: லியோ படத்தில் ஆரம்பம் முதல் இறுதி வரை விஜய் பட்டையை கிளப்பி இருக்கிறார் என்று படத்தை பார்த்துவிட்டு பிரபல திரைப்பட விமர்சகரும், வெளிநாட்டு சென்சர் போர்டு உறுப்பினருமான உமைர் சந்து படத்தின் விமர்சனத்தை தெரிவித்துள்ளார்.

இன்று 19ஆம் தேதி லியோ ரிலீஸ் நாள் அன்று விஜய் ரசிகர்கள் அனைவருக்கும் தீபாவளி தான். பெரிதும் எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படம் கண்டிப்பாக வெற்றியடையும் என ரசிகர்கள் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் வசூலிலும் புதிய சாதனைகளை படைக்க போகிறது. அதற்கு உதாரணமே ப்ரீ புக்கிங் வசூல் தான். இதுவரை உலகளவில் ரூ. 100 கோடிக்கும் மேல் ப்ரீ புக்கிங்கில் மட்டுமே வசூல் செய்து புதிய சாதனையை பாக்ஸ் ஆபிஸில் படைத்துள்ளது.

anticipation,fans,first review,leo,vijay ,எதிர்பார்ப்பு, முதல் விமர்சனம், ரசிகர்கள், லியோ, விஜய்

இந்நிலையில் இன்று வெளிவரவிருக்கும் லியோ படம் குறித்து முதல் விமர்சனம் வெளியாகியுள்ளது. லியோ படத்தை பார்த்துவிட்டு பிரபல திரைப்பட விமர்சகரும், வெளிநாட்டு சென்சர் போர்டு உறுப்பினருமான உமைர் சந்து படத்தின் விமர்சனத்தை தெரிவித்துள்ளார்.

இதில் ‘இது ஒரு அவுட் அண்ட் அவுட் விஜய் படம். ஆரம்பம் முதல் இறுதி வரை விஜய் பட்டையை கிளப்பி இருக்கிறார். கதைக்களம் மிகவும் எளிமையானதாக இருந்தாலும், படத்திலிருந்த ஆக்ஷன் காட்சிகள் மிரட்டுகிறது. டென்ஷன், ஆக்ஷன், எமோஷன் சரியாக ஒர்கவுட் ஆகியுள்ளது என்பது போல் லியோ படத்தின் முதல் விமர்சனத்தை தெரிவித்துள்ளார். மேலும் இப்படத்திற்கு 5 மதிப்பெண்ணுக்கு 3.75 மதிப்பெண் கொடுத்துள்ளார்.

Tags :
|
|