- வீடு›
- பொழுதுபோக்கு›
- ரஜினியின் ஜெயிலர் வசூலை முறியடிக்க முடியாத லியோ படத்தின் வசூல்
ரஜினியின் ஜெயிலர் வசூலை முறியடிக்க முடியாத லியோ படத்தின் வசூல்
By: Nagaraj Fri, 10 Nov 2023 4:56:39 PM
சென்னை: ரஜினியின் ஜெயிலர் படத்தின் வசூலை நடிகர் விஜய்யின் லியோவால் முறியடிக்க முடியவில்லை.
ரஜினி-விஜய் படங்களின் வசூலை ஒப்பிட்டு தான் நிறைய சண்டைகள் நடக்கும். அப்படி விஜய்யின் லியோ படம் வெளியானதில் இருந்து ரஜினியின் ஜெயிலர் பட வசூலுடன் ஒப்பிட்டு நிறைய தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன.
ஜெயிலர் பட சாதனையை நிறைய இடத்தில் விஜய்யின் லியோ முறியடித்துள்ளது. சில இடங்களில் தவறவிட்டது. தற்போது வரையிலும் ஜெயிலர் பட முழு சாதனையை விஜய்யின் லியோ எட்டவில்லை.
தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா என எல்லா இடங்களிலும் ரஜினியின் ஜெயிலர் மற்றும் விஜய்யின் லியோ பட வசூல் விவரம் குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி ஜெயிலர் படம் தமிழ்நாடு- ரூ. 195 கோடி, கர்நாடகா- ரூ. 71 கோடி, கேரளா- ரூ. 57.5 கோடி, ஆந்திரா, தெலுங்கானா- ரூ. 88 கோடி, Roi- ரூ. 17 கோடி, ஓவர்சீஸ்- ரூ. 198 கோடி, மொத்தம் ரூ. 625+ கோடி.
லியோ படம் தமிழ்நாடு- ரூ. 210 கோடி, கர்நாடகா- ரூ. 40 கோடி, ஆந்திரா, தெலுங்கானா- ரூ. 47 கோடி, கேரளா- ரூ. 59 கோடி, Roi- ரூ. 37 கோடி, ஓவர்சீஸ்- ரூ. 194 கோடி, மொத்தம் ரூ. 585+ கோடி. இதனால் ஜெயிலர் படத்தின் வசூலை லியோ படம் முறியடிக்கவில்லை.