- வீடு›
- பொழுதுபோக்கு›
- லியோ அதிகாலை காட்சி .. உயர்நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை
லியோ அதிகாலை காட்சி .. உயர்நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை
By: vaithegi Tue, 17 Oct 2023 09:43:36 AM
நடிகர் விஜய், இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் கூட்டணி அமைத்து தயாராகி வரும் திரைப்படம் 'லியோ'. இப்படத்தில் அவருக்கு ஜோடியா திரிஷா நடித்து உள்ளார். ஆக்ஷன் அதிரடியில் உருவாகும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார்.
இதனை அடுத்து இந்த படத்தில் சஞ்சய் தத், மிஸ்கின், சாண்டி மாஸ்டர், பிரியா ஆனந்த் என்று பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ஆயுத பூஜையை முன்னிட்டு நடிகர் விஜய் நடிப்பில் வரும் அக்டோபர் 19-ம் தேதி உலகம் முழுவதும் 'லியோ' திரைப்படம் வெளியாகவுள்ளது.
இச்சூழலில் லியோ திரைப்படத்தின் ரசிகர்கள் காட்சிக்கு காலை 4 மணிக்கு அனுமதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிடப்பட்டுள்ளது.
இதையடுத்து காலை 9 மணிக்கு பதிலாக 7 மணிக்கே திரைப்படத்தை திரையிட அனுமதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் பட தயாரிப்பு நிறுவனம் செவன் கிரீன் ஸ்டுடியோ முறையீடு செய்தது. இதை அவசர வழக்காக விசாரிக்க கோரிக்கை விடுத்த நிலையில் நேற்று விசாரணைக்கு எடுப்பதாக நீதிபதி அனிதா சுமந்த் தெரிவித்து இருந்தார்.