Advertisement

லியோ படத்தின் முதல் சிங்கிள் பாடலான 'நா ரெடி' பாடல் இன்று வெளியீடு

By: vaithegi Thu, 22 June 2023 2:55:52 PM

லியோ படத்தின் முதல் சிங்கிள் பாடலான 'நா ரெடி' பாடல் இன்று வெளியீடு

நடிகர் விஜய் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்தவரும் திரைப்படம் லியோ. இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். லியோ படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

இதையடுத்து நடிகர் விஜய் இன்று தனது 49-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு விஜய்க்கு பிறந்தநாள் பரிசு அளிக்கும் விதமாக நள்ளிரவு 12 மணிக்கு ‘லியோ’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு உள்ளனர்.

leo,song ,லியோ ,பாடல்

இந்நிலையில் தற்போது, லியோ திரைப்படத்தில் நடிகர் விஜய் பாடிய ‘நா ரெடி’ பாடல் இன்று மாலை 6.30 மணிக்கு வெளியாகிறது என்று படக்குழு அறிவித்து உள்ளது. இதனை அறிவிக்கும் வகையில், போஸ்டரை ஒன்றையும் வெளியிட்டு உள்ளனர்.

நா ரெடி பாடலின் ப்ரோமோ வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த பாடலை விஜய் உடன் இணைந்து அனிருத் மற்றும் அசல் கோளாறு ஆகியோர் பாடியுள்ளனர்.இப்படம் வருகிற அக்டோபர் 19-ம் தேதி வெளியாக உள்ளது. மேலும் இந்த போஸ்டரை விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

Tags :
|